Published : 18 Dec 2014 06:21 PM
Last Updated : 18 Dec 2014 06:21 PM

சென்னை பட விழா | காஸினோ | 19.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை

சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை காஸினோ திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை.

காலை 10 மணி

The Empty Hours / Las horas muertas / Aaron Fernandez Lesur / Spain / 2013 / 101'

தனித்துவிடப்பட்ட கடற்கரை அருகே பதினேழு வயதுடைய செபாஸ்டியன் தனது மாமனின் சிறிய விடுதியை நடத்தி வருகிறான். அந்த விடுதிக்கு அடிக்கடி தன் காதலனை சந்திப்பதற்கென்று மிராண்டா வருவதுண்டு. ஒவ்வொரு சந்திப்பின்போதும் இவளின் காதலன் தாமதமாக வருவதனால் பல நேரம் அவனுக்கென காத்திருக்க வேண்டிய சூழல். இந்த காத்திருக்கும் வேலை செபாஸ்டியன்னுக்கும் மிரண்டாவிற்குமிடையே உரையாடல் பிறக்கச் செய்கிறது. நேரம், தனிமை நெருக்கத்தை வளர்த்திட துரோகம் பிறக்கிறது.



மதியம் 12 மணி

Ariane’s Thread/France/Robert Guediguian/92’/2014

அரெய்ன் நடுத்தர வயதுப் பெண்மணி. சிறிய அழகான வீட்டில் தனிமையில் வசிக்கும் அவள் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறாள். பிறந்தநாள் விழாவுக்கு நண்பர்கள் உறவினர்கள் பலரையும் அழைத்திருந்தாள். மெழுகுவர்த்தி கேக் என எல்லாம் அப்படியே இருக்க யாரும் வரவில்லை. காத்திருந்து காத்திருந்து பார்க்கிறாள். அவர்கள் அனைவருமே தாங்கள் வரமுடியாததற்கு மன்னிப்புக்கோரி செய்தி அனுப்புகிறார்கள்.

அவள் தனது காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிடுகிறாள். கடலோரப் புறநகர் பகுதியில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் வந்து அமர்கிறாள். அங்குள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்க்கிறாள். பின்னர் கடலில் உல்லாசப் பயணம் மேற்கொள்கிறாள். தனது தனிமை வாழ்க்கையை நாவலாக எழுதப்போவதாகவும் உல்லாசப் பயணத்தின்போது உடன்வருபவர்களிடன் கூறுகிறாள்.



மதியம் 3 மணி

A patriotic man /Finland/Arto Halonen/97’/2013

ஐம்பதுகளில் இருக்கும் டொய்வா திடீரென தான் செய்துகொண்டிருந்த வேலையை ஏதோ காரணத்தால் இழக்கிறான். இதனால் உள்ளூர் மருத்துவமனைக்குச் சென்று ரத்ததானம் செய்ய ஆரம்பிக்கிறான். அவனது ரத்தம் எல்லோருக்கும் பொருந்துவதோடு அவனது ரத்தத்தில் நிறைய ஹீமோகுளோபின் இருப்பதையும் டாக்டர் கண்டுபிடிக்கிறார்.

இதனால் பனிச்சறுக்கு வீரர்களுக்குத் தேவையான உடல் பலத்திற்கு இவனிடமிருந்த ரத்தம் பெறலாம் எனவும் டாக்டர் சிபாரிசு செய்கிறார். இவனிடமும் நம் நாட்டைக்காக்க நீ உதவ வேண்டும் என்கிறார். இவனை அந்த ஸ்கை வீரர்கள் வாடகைக்கு எடுக்கிறார்கள். இவனிடமிருந்து ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள். என்றாலும் அவனது மனைவி அவனுக்கு ரத்த சிவப்பு அணுக்கள் மேலும் உருவாக அக்கறை எடுத்துக்கொள்வாள் என நம்புகிறான்.

நாளுக்குநாள் அவன் நினைவிழந்துகொண்டிருக்கிறான். அவன் மனைவியோ அதிர்ச்சியில் உறைகிறாள். சக்திவாய்ந்த ரத்தத்தை ஏற்றிக்கொண்டதன்மூலம் மூன்று வீரர்கள் ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் கலந்துகொள்ளும் தகுதிபெற்று தேசத்தின் பெருமையை நிலைநாட்டுகிறார்கள். விளையாட்டுத்துறையில் பெருகிவரும் ஊழல்களை இப்படம் மிகத் துணிவோடு பேசுகிறது.



மாலை 5 மணி

Scouting for Zebras /Belgium/Benoit Mariage/80’/2014

பெல்ஜியம் தலைநகரின் அருகேயுள்ள அபிட்ஜன் கிராமக் குடியிருப்புப் பகுதிகளின் தெருக்களில் சதா கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் ஏழைச்சிறுவர்களைப் பார்க்கலாம். அவ்வழியே செல்லும் பெல்ஜியன் கால்பந்தாட்ட விளையாட்டுத்துறை நிர்வாகி ஜோஸ் அவர்களிடத்திலிருந்து ஒரு விளையாட்டு வீரனை தேர்ந்தெடுக்க முடியுமா என முயற்சிக்கிறான்.

உண்மையில் அங்கு வாழும் ஆப்பிரிக்க ஏழை மக்களிடம் இருந்து ஒரு விளையாட்டு வீரன் கிடைக்கிறான். யாயா எனும் அந்த இளைஞனின் கண்களில் கனவுகள். கால்களிலோ பந்தாட்டத்தை வெல்லும் வேகம். அவனை உயர்ந்த விளையாட்டு வீரனாக்க முடியும் என்று ஜோஸ் கூறுகிறான். யாயாவுக்கு லட்சியத்தை பிடித்துவிடும் நம்பிக்கை துளிர்க்கிறது. ஆனால் அடுத்தடுத்து நிறைய தடைகள். அவற்றை கடந்துசெல்லும் வேகத்தையும் அடைகிறான் யாயா.



மாலை 7.15 மணி

Tales | Iran/Rakhshan Bani-Etemad /88’/2014

ஒரு பத்திரிகையாளன் நீண்டகாலம் கழித்து தனது சொந்த நாட்டுக்கு ஒரு டாக்குமென்டரி எடுக்க வருகிறான். இப்படம் பல கதைகளாகப் பிரிந்து மன அழுத்தங்கள், காதல், குற்றம், சோகம், மகிழ்ச்சி, வேடிக்கைகள், நெஞ்சைத் தொடும் சம்பவங்கள் என பலவாறாகவும் உள்ள ஒரு குடும்பத்தைக் காட்டுகிறது.

அது இன்றுள்ள ஈரானிய வாழ்வை காட்டுவதாகவும் உள்ளது. ஒவ்வொரு கதையும் ஒரு சமூக பிரச்சினையை உள்ளடக்கியுள்ளது. வறுமை, பொருளாதாரப் பிரச்சினை என பல விஷயங்கள் பதிவாகியுள்ளன. உதாரணமாக இதில் இடம்பெற்றுள்ள ஒரு கதையில் ஒரு பெண் தான் பணியாற்றும் தொழிற்சாலையில் அவர்கள் பெற்ற கடனுக்காக சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவான். இதை எதிர்த்து ஒரு பெண் போராடுவாள்.

இப்படம் 71வது வெனீஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான தங்க சிங்கம் விருது பெற்றது. டொராண்டோ உலகத் திரைப்படவிழாவில் சமகால உலக சினிமா பிரிவில் திரையிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x