Published : 21 Dec 2014 02:52 PM
Last Updated : 21 Dec 2014 02:52 PM

சென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 22.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை

சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் திங்கள்கிழமை ரஷ்ய கலாச்சார மையம் அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை:

காலை 10.00 மணி:

Station North |Gare du Nord/France/Claire Simon/119’/2013

பள்ளியில் பாரீஸ் நகரின் சந்தடி மிகுந்த கேர் டு நோர்டு ரயில்நிலையத்திற்குள் வரும் மனிதர்களைப் பற்றிய கதை இது. அங்கு தினம் தினம் ஏராளமான பேர் வருகிறார்கள். போகிறார்கள். அந்த ஸ்டேஷனைக் கடந்து சென்று தங்கள் வாழ்க்கையைத் தொடரும் மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள். மாத்தில்டேவும் சாச்சாவும் ஜானும் இங்குதான் சந்தித்துக்கொண்டார்கள்.

இஸ்மாயில் ஒவ்வொருநாளும் அங்கு மிகவும் ஆடம்பரமாக ஸ்டேஷன் வழியாகச் செல்வான். அவன் மாத்தில்டேவை புறநகர் ரயிலுக்காக காத்திருக்கும்போது முதன்முதலாகப் பார்த்தான். இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்கினார். இங்குள்ள எஸ்கலேட்டரில் மேலே ஏறவும் கீழே இறங்குவதுமான போக்குவரத்தில் ஒருவரையொருவர் சந்திக்கும்போதும் ரயில்வே பிரமாண்ட கூடத்தில் காத்திருந்து பேசிக்கொள்ள தவறுவதில்லை. அவர்கள் சாச்சாவையும் ஜானையும் சந்திக்கிறார்கள்.

சாச்சா தன் மகளைத் தவறுவிட்ட பிறகு, அவள் தற்போது லண்டனுக்கும் பாரீசுக்கும் இடையில் உள்ள லில்லி எனும் ரயில்நிலையத்தில் ஜானுடன்தான் தனது நேரத்தை செலவழித்துவருகிறாள். இப்படி பலரும் தங்கள் கவலைகள், கனவுகள், தத்துவங்கள், வாழ்க்கைக் கதைகள் எல்லாவற்றையும் நினைவுகளாக பகிர்ந்துகொள்கின்றனர்.

இந்த ஸ்டேஷன் ஒரு தனி உலகம். இங்கு புலம் பெயர்ந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், பயணிகள், பேய்கள்கூட வரும், ரயில்நிலையத்தின் வழியாக ஊடறுத்துச்செல்லும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வேகமாக கடந்துசென்று மறைந்துபோகிறது.

*

மதியம் 12.00 மணி:

Dear Betrayed Friend/Hungary/Sara Cserhalmi/90’/2012

கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் ரகசிய சேவை ஆவணக் காப்பகத்திற்குச் செல்லும் அன்டோர் ஷெட்டி அங்கு எதுவும் பிரிக்கப்படாமல் இருக்கும் ஆவணங்களைப் பார்வையிடுகிறான். அதில் இவனைப் பற்றிய அறிக்கைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். அந்த அறிக்கைகளை கவனமாகப் படித்த பிறகுதான் தெரிகிறது, இவனது நண்பன் ஜானோஸ் பாஸ்டோர் என்பவன் பல பத்தாண்டுகளாக இவனைப் பற்றி எழுதி அனுப்பிய அறிக்கைகள் என்பது.

இதுநாள் வரை காட்டிக்கொடுத்த நண்பனைத் தேடிச் செல்கிறான், அன்டோர் ஷெட்டி. இவ்வளவு முரண்பாடுகளோடு உள்ள ஒருவன், எப்படி அரசாங்கம் மாறிய பிறகுகூட இங்கு அவனால் வாழ முடிகிறது? அதன்பிறகு இருவேறு கதாப்பாத்திரங்கள் மோதிக்கொள்ளும் கதையில் பல உண்மைகள் மேலும் வெளிவருகின்றன... ஜோ.ஆர்.டேன்ஸ்டேல் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். சூடான் உலகத் திரைப்படவிழாவில் பங்கேற்றது.

*

பிற்பகல் 3.00 மணி:

பூவரசம் பீப்பீ | தமிழ்

கோவை மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த ஒரு கிராமம். இங்கிருந்து நகரில் சென்று படிக்கும் ஐந்து பேர் கோடை விடுமுறையைக் கொண்டாட்டமாகக் கழிக்கிறார்கள். இவர்கள் அனைவருமே பத்து, பன்னிரெண்டு வயதினர். இவர்களில் முதல் மூன்று சிறுவர்களும் நெருங்கிய நண்பர்கள்.

இவர்கள் கொட்டும் மழையில் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும்போது, ஒரு பாலியல் வன்முறைக் குற்றத்தை நேரடியாகப் பார்க்கிறார்கள். மிருகத்தனமான இந்தச் செயலால் அந்தப் பெண் இறந்துவிடுகிறாள். ஆனால், ஆற்று வெள்ளத்தில் அந்தப் பெண் பலியாகிவிட்டதாக ஊர் நம்புகிறது. ஆனால் அது ஆற்றின் குற்றமல்ல, குற்றத்தை இழைத்தவர்கள் அதே ஊரைச் சேர்ந்த நான்கு பேர் என்பது அவர்களுக்குத் தெரியவருகிறது. சரியான ஆதாரத்துடன் அவர்களை போலீஸில் சிக்க வைக்க இந்தக் குழு என்ன செய்தது என்பதுதான் திரைக்கதை.

குற்றப் பின்னணி கொண்ட கதையைக் குழந்தைகளுடன் இணைத்து அதை த்ரில்லராக திரைக்கதை அமைத்த விதத்தில் இயக்குநர் கவனத்தைக் கவர்கிறார்.

*

பிற்பகல் 5.00 மணி:

சிகரம் தொடு | தமிழ்

சிறந்த போலீஸ் அதிகாரியாகச் செயல்பட்டு ஒரு காலை இழந்த செல்லப்பா (சத்யராஜ்) தன் மகன் முரளி பாண்டியனை (விக்ரம் பிரபு) போலீஸ் அதிகாரியாக்க துடிக்கிறார். போலீஸ் வேலையை வெறுக்கும் மகன், அப்பாவின் ஆசையைத் தட்ட முடியாமல் வேண்டா வெறுப்பாகப் போலீஸ் அதிகாரியாக ஆகிறான். போலீஸ் வேலையை வெறுக்கும் டாக்டர் அம்புஜத்தை (மோனல் கஜ்ஜார்) காதலிக்கிறான்.

ஒருமுறை ஏடிஎம் சென்டருக்கு வரும் கதாநாயகனின் தாத்தா, அப்பாவைக் கொள்ளையர்கள் தாக்குகிறார்கள். செல்லப்பா கொள்ளையர்களைப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார். கொள்ளையர்கள் செல்லப்பாவைச் சுட்டுவிட்டு அம்புஜத்தையும் கடத்திச் சென்று தலைமறைவாகிறார்கள். முரளி கொள்ளையர்களைக் கண்டு பிடித்தானா? தன் காதலியை மீட்டானா?

*

இரவு 7.30 மணி:

Shocking Blue / Mark de Cloe / Netherlands 2010 / 82

நட்பின் நம்பகத்தன்மை ஒரு துரோகத்தால் சந்தேகத்துக்குள்ளாகிறது. (வில்லெம்) ரூபன் வான் வீல்டென், (ஜேக்கஸ்) (நீல்ஸ் கோம்பெர்ட்ஸ்), கிரிஸ் (ஜிம் வான் டெர் வீல்டென்) ஆகிய மூவரும் நெதர்லாந்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சிறு வயது நண்பர்கள். வளர்ந்து பதின் பருவத்தை அடையும்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

ஜேக்கஸ் ஒரு விபத்தில் படுகாயமடைகிறான். விபத்தை ஏற்படுத்தியது வில்லெம். வில்லெம் நடந்த விபத்துக்கு மிகவும் வருந்தினாலும், அவனுக்குள் ஒரு கேள்வி எழுகிறது. ஜேக்கஸ் அழகுப் பெண்ணான மேரியாகனை (லிஸா) தன்னிடமிருந்து அபகரித்துக் கொண்டதாக தனக்குள் இருக்கும் ஆவேசத்தின் வெளிப்பாடோ இந்த விபத்து என அவனை, தன்னைத் தானே கேள்வி கேட்க வைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x