Published : 11 Jan 2017 06:35 PM
Last Updated : 11 Jan 2017 06:35 PM

சென்னை திரைப்பட விழா: ஜன.12-ல் என்ன படம் பார்க்கலாம்?





சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை (ஜன.12) கண்டு ரசிக்கத்தக்க படங்கள் - சில பரிந்துரைகள்:



ஜன.12 - ரஷ்ய கலாச்சார மையம் - முற்பகல் 11.30 மணி | மெட்ரோ | இயக்குநர்: ஆனந்த் கிருஷ்ணன் | தமிழ் | 119 நிமிடங்கள்



ஓய்வு பெற்ற அப்பா, இல்லத்தரசி அம்மா, இரண்டு மகன்கள் எனக் கச்சிதமான நடுத்தரக் குடும்பம். பொறுப்புள்ள மூத்த மகனாக நாயகன் சிரிஷ். ஒன்றரை லட்சம் ரூபாய் மோட்டார் சைக்கிள், ஆப்பிள் ஐ போன் என ஆடம்பரமாக வாழப் பேராசைப்படும் இளைய மகனாக சத்யா. தனது ஆசைகளை அடைவதற்காக எதற்கும் துணிகிறார் சத்யா. அந்த துணிச்சல் அவரை சங்கிலிப் பறிப்புக் கும்பலிடம் அழைத்துச் செல்கிறது. அதன் பிறகு என்னென்ன நடக்கின்றன என்பதை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்கிறது இயக்குநர் ஆனந்த கிருஷ்ணாவின் 'மெட்ரோ'.



*****



ஆர்கேவி | பகல் 12.00 மணி | POST TENEBRS LUX | DIR: CARLOS REYGADAS | USA | 2012 | 120'



நகரத்தில் வாழ்ந்து வந்த வசதியான ஒரு குடும்பம், மெக்ஸிகோவின் கிராமப்புறத்துக்கு குடிபெயர்கிறது. அங்கு அவர்கள்

சந்திக்கும் வர்க்க பேதம், குடும்பத்துக்குள் வரும் நெருக்கடியைச் சொல்லும் படம். பாரபட்சமில்லாத இயற்கை உலகில் ஒரு குடும்பத்தின் நிலை என்ன என்பதை அற்புதமான ஒளிப்பதிவில் உணர்ச்சிகளோடு பிரதிபலிக்கும் படம்.



*****



ரஷ்ய கலாச்சார மையம் | பிற்பகல் 2.00 மணி | Mantra / English / 2015 / 90'



உலகமயமாக்கலை விமர்சனபூர்வமாக அணுகும் ஓர் இந்தியத் திரைப்படம். இந்தியா ஒளிர்கிறது என்று கூறப்பட்டதன் பின்னணிக்கு எதிரான நிலையை இப்படம் பேசுகிறது. மந்த்ரா தனது குடும்பக் கதையை கூறுகிறாள். அது மட்டுமின்றி அவள் உள்ளூர் சந்தையில் பன்னாட்டு வணிகம் நுழைவதை எதிர்த்து போராடுகிறாள். மாற்றத்துக்கான இந்தியா எனும்பொய்த்தோற்றத்தை எதிர்த்து இயங்கும் மையக் கதாபாத்திரத்தின் தனிப்பட்ட வாழ்க்கையையும் இப்படம் அலசுகிறது.



*****



ஆர்கேவி | பிற்பகல் 2.30 மணி | THE PEOPLE VS. FRIZBAUER | DIR: LARS KRAUME | GERMANY | 2015 | 105'



இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான தி பீப்பிள் வெர்சஸ் ஃபிரிட்ஸ் பாயர் தன்னுடைய வழக்கறிஞர் பணியில் ஈடுபாடு மிக்கவர். அவர் நாஜிக்களின் குற்றங்களை வெளிக்கொண்டுவர முயற்சிப்பவர். ஜெர்மனியில் ஒரு யூதராகப் பிறந்த ஃபிரிட்ஸ் பாயர் தன்னுடைய வழக்கறிஞர் பணியை தொடங்கியபோது அது தடைபட்டது. 1930-களில் அவர் வதைமுகாம்களுக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அங்கிருந்து அவர் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு அங்கிருந்து தப்பித்து போர் முடியும்வரை டென்மார்க் மற்றும் ஸ்வீடன் சென்றவர் ஜெர்மனிக்கு 40களில் இறுதியில்தான் வந்து தனது வழக்கறிஞர் பணியை திரும்பவும் தொடங்கினார். இப்படத்தைப் பொறுத்தவரை இக்கதையை ஒருவித நாடகத்தன்மையோடு அதன் வீரியம் குறையாமல் இயக்கியிருக்கிறார் இயக்குநர் லார்ஸ் கிராமே.



*****



கேஸினோ | பிற்பகல் 2.30 மணி | SUMMERTIME | LA BELLE SAISON | DIR: CATHERINE CORSINI | FRANCE | 2015 | 120'



1971. டெல்ஃபைன் (23) ஒரு விவசாயியின் மகள், அவள் கிராமப்புறங்களையும் நிலங்களில் வேலை செய்வதையும் தனது தந்தையையும் மிகவும் நேசிக்கக் கூடியவள். ஆனால் அவள் பாரீஸ் நகரத்திற்கு வண்டி ஓட்டிச்செல்ல அனுமதி மறுப்படுகிறது. அவள் கரோல் (35) ஐ சந்திக்கிறாள். கரோல் என்பவளோ மானுவல் என்பவனுடன் வசிப்பவள். அதேநேரம் பெண்ணிய இயக்கங்களில் பங்கெடுத்துக்கொள்பவள். டெல்பைன் பார்த்த மாத்திரத்திலேயே கரோலின் காதலில் விழுகிறாள். அந்த நிமிடத்திலிருந்து கரோலின் வாழ்க்கை மாறிப்போகிறது. மிலன் இண்டர்நேஷனல் லெஸ்பியன் அன்ட் கே உள்ளிட்ட பன்னாட்டுத் திரைவிழாக்களில் இப்படம் திரையிடப்பட்டது.





*****

ஐனாக்ஸ் 3 | காலை 10.00 மணி | ODE TO MY FATHER | DIR: YOON JE-KYOON | S.KOREA | 2014 | 126'



1950-ல் நடைபெற்ற கொரியப் போரின்போது ஏற்பட்ட பெரும் குழப்பத்திற்கு இடையே தப்பித்து வந்த இளம் சிறுவன் பெயர் டக் சூ தன் கண்களை சிமிட்டும் தருணத்தில் அவனுடைய தங்கை காணாமல் போகிறாள். அவளைத் தேடிச் சென்ற தந்தை போன திசையையும் தெரியாமல் விழிக்கிறான். கொரியாவின் பூஸான் எனும் இடத்தில் கதை நிகழ்கிறது. தன் குடும்பம்பத்திலிருந்து பிரிந்த டக் சூ அனைத்துவிதமான கூலி வேலைகளையும் செய்கிறான். அவனது கடமைதவறாமை அவனை கொடிய ஜெர்மனிய சுரங்கம் வரைக்கும் அழைத்துச் செல்கிறது. அங்குதான் அவன் தன் முதல் காதல் யோங்ஜாவைச் சந்திக்கிறான். மேலும் ஒரு மனிதனின் தனிப்பட்ட தியாகங்களைப் பேசும் இந்த தலைமுறைக் காவியத்தில் யுத்தத்தினால் சீரழிக்கப்பட்ட வியட்நாம் குறித்தும் இடம்பெறுகிறது.





*****

ஆர்கேவி | காலை 10.00 மணி | THEY WILL RETURN | ELES VOLTAM | DIR: MERCELO LORDELLO | BRAZIL | 2012 | 100'



கிரிஸ், வயது 12 மற்றும் அவளது அண்ணன் ஆகியோரை சாலையோரத்தில் பெற்றோர் விட்டுவிடுகிறார்கள். கடைசியில் அது ஒரு தண்டனைபோல் ஆகிவிடுகிறது. ஆனால் அது மிகப் பெரிய சவாலாக அமைகிறது. அவள் வீட்டுக்குத் திரும்பும் வழியை கண்டுபிடிக்கிறாள். அந்தப் பயணத்தில் அவள் வித்தியாசமான உண்மைகளைக் காண்கிறாள். இன்றைய நவீன உலகத்தின் யதார்த்த வாழ்க்கையை காணும் கிரைஸ் எனும் சிறுமி தன்னைக் கண்டடைவதும் நிகழ்கிறது.





*****

ஐனாக்ஸ் 3 | பிற்பகல் 2.15 | FADO / FADO | DIR: JONAS ROTHLAENDER | GERMANY | 2016 | 100'



லிஸ்பன் நகரில் இருக்கும் தனது முன்னாள் காதலி டோரோவை சமாதானம் செய்ய இளம் டாக்டர் ஃபாபியன் லிஸ்பன் நகருக்கு செல்கிறான். இருவரும் மீண்டும் ஒருமுறை காதலிக்க ஆரம்பிக்க, இதற்கு முன்னால் வந்த பிரச்சினைகளே மீண்டும் வருகிறது. ஃபாபியனின் பொறாமைக் குணம் அவர்கள் உறவை சோதிக்க ஆரம்பிக்கிறது. சிகாகோ உள்ளிட்ட பல்வேறு உலகப் படவிழாக்களில் விருதுகள் பல பெற்ற படம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x