Published : 12 May 2018 12:10 PM
Last Updated : 12 May 2018 12:10 PM

‘அர்ஜுன் ரெட்டி’ இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர்

‘அர்ஜுன் ரெட்டி’ இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. ஹீரோவாக விஜய் தேவரகொண்டாவும், ஹீரோயினாக ஷாலினி பாண்டேவும் நடித்துள்ளனர். கடந்த வருடத்தின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது இந்தப் படம். 5 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 50 கோடி ரூபாயை வசூலித்தது.

தெலுங்கு ரசிகர்களைத் தாண்டி மற்ற மொழி ரசிகர்களையும் இந்தப் படம் ஈர்த்ததால், பிற மொழிகளிலும் இதை ரீமேக் செய்து வருகின்றனர். சந்தீப் ரெட்டியே இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார். முரட் கெதானி மற்றும் அஸ்வின் வர்தே இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

இதில், அர்ஜுன் கபூர் அல்லது ரன்வீர் சிங் நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால், ஷாகித் கபூர் நடிக்கப் போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை, சந்தீப் ரெட்டியே தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

‘அர்ஜுன் ரெட்டி’, தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. பாலா இயக்கும் இந்தப் படத்துக்கு, ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார். விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.

 

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

“விஜய், சூர்யா, விஜய் சேதுபதியிடம் இந்தக் கேள்வியைக் கேட்பீர்களா?” - அமலாபால் காட்டம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x