Published : 12 Apr 2018 01:32 PM
Last Updated : 12 Apr 2018 01:32 PM

இரண்டு ஹீரோயின்களை அறிமுகப்படுத்தும் கரண் ஜோஹர்

‘ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் 2’ படத்தின் மூலம் இரண்டு ஹீரோயின்களை பாலிவுட்டில் அறிமுகப்படுத்துகிறார் கரண் ஜோஹர்.

கரண் ஜோஹர் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் படம் ‘ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்’. இந்தப் படத்தில்தான் சித்தார்த் மல்ஹோத்ரா, வருண் தவான், அலியா பட் ஆகியோரை அறிமுகப்படுத்தினார் கரண் ஜோஹர். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் கரண் ஜோஹர் தான்.

இந்நிலையில், ‘ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. கரண் ஜோஹர் தயாரிக்கும் இந்தப் படத்தை, புனித் மல்ஹோத்ரா இயக்குகிறார். பிரபல நடிகர் ஜாக்கி ஷெராஃப்பின் மகன் டைகர் ஷெராஃப் ஹீரோவாக நடிக்கிறார்.

முதல் பாகத்தில் மூன்று பேரை அறிமுகப்படுத்தியது போலவே, இரண்டாம் பாகத்தில் இரண்டு நடிகைகளை அறிமுகப்படுத்துகிறார் கரண் ஜோஹர். பாடகியான தாரா சுதாரியா மற்றும் அனன்யா பாண்டே இருவரும் தான் இந்தப் படத்தின் ஹீரோயின்கள். அனன்யா பாண்டே, நடிகர் சங்கி பாண்டேவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x