Published : 26 Feb 2017 12:51 PM
Last Updated : 26 Feb 2017 12:51 PM

ஸ்நாப் டீல், ஸ்டேஸில்லா பணியாளர்களை வரவேற்க தயார்: பேடிஎம், மொபிக்விக் அறிவிப்பு

இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களை மறு சீரமைப்பு செய்து வருகின்றன. இதன் காரணமாக பலரை வேலையில் இருந்து நீக்கவும் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. கடந்த வாரம் ஸ்நாப் டீல் 600 நபர்களை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. தவிர சென்னையை சேர்ந்த நிறுவனமான ஸ்டேஸில்லா நிறுவனம் தற்போதைய வடிவில் இருக்கும் செயல்பாடுகளை முடக்குவதாகவும், விரைவில் புதிய பிஸினஸ் மாடலுடன் களம் இறங்குவதாகவும் அறிவித் திருக்கிறது.

இந்த நிலையில் பேடிஎம் மற்றும் மொபிக்விக் நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இருந்து நீக்கப்படுபவர்களை வேலைக்கு சேர்த்துகொள்வதாக அறிவித்திருக்கிறது.

ஆயிரம் பணியாளர்கள் தேவை

டெல்லி மற்றும் தலைநகர் பகுதியில் இருக்கும் தொழில் நுட்ப வல்லுநர்கள் வருத்தப் படவேண்டாம். பேடிம் உங்களை வரவேற்க தயாராக இருக்கிறது என அந்த நிறுவனத்தின் நிறுவனர் விஜய்சேகர் சர்மா தன்னுடைய ட்விட்டரில் தெரிவித் திருக்கிறார். பேடிஎம் நிறுவனம் விரைவில் பேமென்ட் வங்கியைத் தொடங்க இருக்கிறது. அதற்கு 700 முதல் 1,000 பணியாளர்கள் வரையில் தேவைப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல, மொபைல் பேமென்ட் நிறுவனமான மொபிக்விக், சமீபத்தில் வேலை இழந்தவர்களை எடுத்துக்கொள்ள இருப்பதாகவும், பெங்களூருவில் திறக்க இருக்கும் அலுவலகத்துக்கு பணியாளர்கள் தேவை. 13 நகரங்களில் அமையவிருக்கும் அலுவலகங்களில் குறைந்த பட்சம் 700 பணியாளர்கள் தேவை எனவும் அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிபின் பிரித் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x