Published : 01 Mar 2015 11:24 AM
Last Updated : 01 Mar 2015 11:24 AM

வர்த்தகர்கள், சாதாரண மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்: இந்திய தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் சம்மேளனம் கருத்து

பெரிய அறிவிப்புகள், திட்டங் களில்லாத, அனைத்துத் தரப்பின ரையும் பாதிக்கும் சேவை வரி போன்ற அம்சங்களைக் கொண் டிருப்பதால் மத்திய பட்ஜெட் ஏமாற்றமளித்திருப்பதாக தொழில் துறையினர் கூறியுள்ளனர்.

இந்திய தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் சம்மேளனம் (ஃபிக்கி) சென்னையில் ஏற்பாடு செய்தி ருந்தது. இதில், தொழில்து றையினர் பங்கேற்று பேசியது:-

மத்திய வருவாய் அமைச்சக முன்னாள் செயலாளர் எம்.ஆர். சிவராமன்:

இதுவரை நான் பார்த்திராதவகையில், குழப்ப மான பட்ஜெட்டாக உள்ளது. 14-வது நிதிக்குழு அறி்க்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான நிதி ரீதியிலான உறவுகளின் எதிர்காலம் பற்றிய தெளிவான தகவல் இல்லை. அடுத்த 4 ஆண்டுகளில் கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதகமாகக் குறைக்கப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டின் நிலை என்ன என்பது பற்றிய தெளிவான தகவல் இல்லை. கல்வி, வேலைவாய்ப்பு, குடிநீர், ஊரக வளர்ச்சி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு ரூ.2 லட்சம் கோடி திட்டங்களை அமைச்சர் அறிவித்தார். ஆனால், அதற்கான நிதி எங்கிருந்து வரும் எனத் தெரிவிக்கவில்லை.

தேசிய வேளாண் சந்தை அமைக்கப்படும் என்பது வரவேற் கத்தக்கது. அது ஹரியாணாவில் உள்ள ஒரு விவசாயி, தனது உற்பத்திப் பொருளை சென்னையில் உள்ள இடத்தில் விற்பனை செய்ய வழிவகுக்கும்.

திறன் மேம்பாடு தொடர்பான அறிவிப்பு பழையது. அதற்குப் பதிலாக, 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி, விவசாயிகளுக்கு மெக்கானிக், பிளம்பிங் உள்ளிட்ட தொழிற்பயிற்சியை அளித்திருக்கலாம். பெரிய மாற்றங்கள் இல்லாமல், தேர்தல் நேரத்தில் போடப்படும் கவர்ச்சி பட்ஜெட் போல் உள்ளது.

ஜே. சந்திரமவுலி, ஃபிக்கி, வரி ஆலோசகர்):

ரூ.500 கோடிக்கு மேல் புழக்கம் கொண்ட, வங்கிச்சேவையளிக்காத நிதி நிறுவனங்கள், சர்பாஸி சட்டத்தின் கீழ் வாராக் கடன்களை, ஏலம் விடுவது போன்ற வழிகளில் தாங்களே வசூலித்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு அவ்வங்கிகளுக்கு ஊக்கமளிக்கும். செல்வ வரியை ரத்து செய்திருக்கும் மத்திய அரசு, ரூ.1 கோடிக்கு மேல் சொத்து இருந்தால், 2 சதவீதம் சர்சார்ஜ் செலுத்தவேண்டும் என்ற அறிவித்திருப்பதால் அரசுக்கு வருவாய் கூடும்.

ஃபிக்கி தலைவர், எம் ரஃபீக் அகமது:

எதிர்பார்ப்புக்கு மாறான ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட். உற்பத்தித் துறைக்கு பெரிய அறிவிப்புகள் ஏதும் இல்லை. சேவை வரியை 12 சதவீதத்தில் இருந்து 14 சதவீதம் வரை உயர்த்தியிருப்பதால், அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும்.

நந்தகுமார், ஃபிக்கி, எரிசக்திக் குழு அமைப்பாளர்:-

1.75 லட்சம் மெகாவாட் மரபுசாரா எரிசக்தி ஆலைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காற்றாலை மின்சாரத்துக்கு 60 ஆயிரம் மெகாவாட் ஒதுக்கப் பட்டுள்ளது. இத்துறையில் சிறந்து விளங்கும் தமிழகத்தில் இதனால் அதிக முதலீடு கிடைக்கும். இதுதவிர, ரூ.1 லட்சம் கோடியில் ஒரே இடத்தில் செயல்படக்கூடிய தலா 4 பெரும் மின்திட்டங்கள் என்ற அறிவிப்பும் மின்நிலைமையைச் சீராக்கி, முதலீட்டையும் ஈர்க்கவல்லது.

இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.எஸ்.சுந்தரராஜன்:

திவாலாவோர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், இப்பிரச்சினை நீதிமன்றத்துக்குப் போனால் பல ஆண்டுகள் இழுபறி ஆகும் நிலை உள்ளது.

இந்த சட்டம் இப்பிரச்சினையை தீர்க்கும். ஆனால் பட்ஜெட் உரையே வழக்கத்தைப் போல் அல்லாமல் ஏனோதானோவென்று இருந்தது. நிதி மசோதாவை முழுவதுமாகப் படித்தால்தான் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x