Published : 16 Sep 2014 10:50 AM
Last Updated : 16 Sep 2014 10:50 AM

வர்த்தகப் பற்றாக்குறை சரிந்தது

ஆகஸ்ட் மாத வர்த்தகப் பற்றாக்குறை 1,084 கோடி டாலராக குறைந்தது. கடந்த ஜூலை மாதம் இது 1,220 கோடி டாலராக இருந்தது. அதே சமயத்தில் கடந்த வருட ஆகஸ்ட் மாத வர்த்தகப் பற்றாக்குறையை விட இது 2.2 சதவீதம் (1,060 கோடி டாலர்) அதிகமாகும்.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான வர்த்தகப்பற்றாக்குறை 5,615 கோடி டாலராக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் இது 7,060 கோடி டாலராக இருந்தது. ஏற்றுமதி சிறிதளவு அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 2,625 கோடி டாலராக இருந்த ஏற்றுமதி இப்போது 2,696 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது. அதே சமயம் இறக்குமதியும் சிறிதளவு அதிகரித்திருக்கிறது. இறக்குமதி இப்போது 3,780 கோடி டாலராகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x