Published : 17 Sep 2014 11:11 AM
Last Updated : 17 Sep 2014 11:11 AM

போஷ் ஆலை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ஜெர்மனியைச் சேர்ந்த போஷ் நிறுவனத்தின் இந்திய ஆலை பெங்களூரில் அடுகோடி எனுமிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை பணியா ளர்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 22 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

மருத்துவ சலுகைகளை ரத்து செய்துவிட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று நிர்வாகம் வற்புறுத்துவதாக மைகோ ஊழியர் சங்க தலைவர் பிரசன்னகுமார் தெரிவித்தார். ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் சட்ட விரோதமானது என்று பாஷ் நிறுவனம் தெரிவித் துள்ளது. இருப்பினும், சகஜ நிலையை கொண்டு வர மாநில கூடுதல் தொழிலாளர் நலத்துறை ஆணையர் உதவியுடன் ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலையில் 2,575 நிரந்தப் பணியாளர்களும், 700 தற்காலிகப் பணியாளர்களும், 1,000 ஒப்பந்தப் பணியாளர்களும் பணிபுரிகின்றனர்.

ஊழியர்களுக்கு பணி மாற்றல் உத்தரவை வழங்கி வருவதாகவும், எவ்வித போக்கு வரத்து வசதியும் இல்லாமல் பெங்ளூரில் பிடாடியில் உள்ள இந்நிறுவனத்தின் மற்றொரு ஆலைக்கு மாற்றப்படுவதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். இதற்கு முன்பு 2011 செப்டம்பர் மாதத்தில் இந்த ஆலை சிறிது நாள்கள் மூடப்பட்டன. கடந்த ஆண்டு மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களில் டூல்-டவுன் ஸ்டிரைக் காரணமாக மூடப்பட்டது.

இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இந்நிறுவனத்தின் ஜெய்ப்பூர் ஆலையில் வேலை நிறுத்தம் நடைபெற்றது ஆனால் அது இரு நாள்களில் தீர்க்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x