Published : 28 Oct 2016 10:56 AM
Last Updated : 28 Oct 2016 10:56 AM

சைரஸ் மிஸ்திரி குற்றச்சாட்டுக்கு சரியான நேரத்தில் பதில்: டாடா சன்ஸ் அறிக்கை

சைரஸ் மிஸ்திரி டாடா சன்ஸ் இயக்குநர் குழுவுக்கு தனிப்பட்ட முறையில் எழுதிய கடிதம் பொது வெளியில் கிடைத்தது வருத்தத்துக்குரிய விஷயம். அந்த கடிதத்தில் டாடா சன்ஸ் இயக்குநர் குழு, தனிநபர்கள், குழும நிறுவனங்கள் மீது சைரஸ் மிஸ்திரி கூறியிருக்கும் குற்றச் சாட்டுகள், முறைகேடுகளுக்கு சரியான நேரத்தில் பதில் அளிக்கப்படும் என டாடா சன்ஸ் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் கடிதத்தில் கூறியிருப்ப தாவது: டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் இருக்கிறார். 2011-ம் ஆண்டு துணைத் தலைவராகவும், 2012-ம் ஆண்டு டிசம்பரில் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டார். டாடா குழுமத்தின் கொள்கை, நிதி நிலைமை, கலாசாரம், குழும நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் அவருக்குத் தெரியும்.

ஒரு குழுமத்தின் தலைவராக அவருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. நிறுவனத் தில் இருந்து வெளியேறிய பிறகு இது போன்ற குற்றச்சாட்டுகளை அவர் வெளியிடுகிறார். ஆனால் 10 வருடங்கள் குழுமத்தில் இருந்திருக்கிறார்.

அப்போது அவர் பேசிய கருத்துகளை வெளியிடும் பட்சத்தில், சைரஸ் மிஸ்திரியின் முரண்பாடுகள் தெரியவரும். குழுமத்தின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்துக்கு மாறாக பல முறை செயல்பட்டிருக் கிறார்.

டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் பல முக்கியமான நபர்கள் இருக்கிறார்கள். நிறுவனத்தின் நலனுக்கு ஏற்பவே இயக்குநர் குழு முடிவெடுத்தது. இயக்குநர் குழு மீது சைரஸ் மிஸ்திரி நம்பிக்கை இழந்தது வருத்தம் அளிக்கிறது.

நிறுவனத்தின் தொழில் நடவடிக்கை குறித்து இயக்குநர் குழு உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்தனர். பிரச்சினைகளை சரியாக கையாளாததால் அவர் மீது நம்பிக்கை குறைந்து வந்தது. அதனால் இயக்குநர் குழு ஒருமனதாக தலைவரை மாற்றும் நடவடிக்கையில் இறங்கியது.

குழுமத்தின் பாரம்பரியம் தவிர 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கிறார்கள். பணியாளர்கள் முன்பு நிறுவனத்தின் பிம்பத்தை உடைக்க முயற்சித்ததை மன்னிக்க முடியாது.

குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை

சைரஸ் மிஸ்திரி கூறியிருக்கும் குற்றச் சாட்டுகள் அடிப்படை ஆதார மற்றவை. தனக்கு சாதகமாக ஒரு தரப்பு வாதத்தை மட்டும் பொதுவெளியில் வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் கூறியிருக்கும் பல குற்றச்சாட்டுகளுக்கு மாறாக பல ஆதாரங்கள் உள்ளன. சரியான நேரத்தில் அவை வெளியிடப்படும்.

டாடா குழுமம் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய குழுமம். பல சோதனைகளை சந்தித்திருந்தாலும், பணியாளர் களின் ஒத்துழைப்பின் காரண மாக பெரிய குழுமமாக வளர்ந் திருக்கிறது. பிரச்சினைகளைக் கண்டு ஓடுவது டாடாவின் வழக்கம் அல்ல. பிரச்சினைகளை சமாளித்து, சிறப்பான எதிர் காலத்தை உருவாக்கும் என டாடா சன்ஸ் வெளியிட்டுள்ள விளக்கத்தில் குறிப்பிட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x