Published : 24 Aug 2016 10:23 AM
Last Updated : 24 Aug 2016 10:23 AM

இவரைத் தெரியுமா?- வொல்ப்காங்க் ப்ராக் ஷாயெர்

முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமான கோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.

2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஏர் பெர்லின் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

இதே நிறுவனத்தின் தலைமை உத்திகள் மற்றும் திட்டங்கள் வகுக்கும் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் மிட்லேண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

2003-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

வியன்னா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுநிலை பட்டமும் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

ஆஸ்திரேலியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் நிர்வாக துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x