Published : 22 Jun 2017 10:06 AM
Last Updated : 22 Jun 2017 10:06 AM

இவரைத் தெரியுமா?- தகாஹிரோ ஹசிகோ

ஹோண்டா மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.

இதற்கு முன்பு நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி, இயக்குநர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்.

1982-ம் ஆண்டில் நிறுவனத்தில் சேசிஸ் டிசைன் இன்ஜினீயராக பணிக்குச் சேர்ந்தவர். ஹோண்டா ஆலை இயக்குநர், ஹோண்டா ஆராய்ச்சி மைய சிஇஓ என பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை சிஆர்-வி, ஓடிசி மினி வேன் போன்ற வாகனங்களின் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றியவர். ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் உலக அளவிலான சந்தையை உருவாக்கியவர்.

நிறுவனத்தின் அமெரிக்க, ஐரோப்பிய, சீனாவில் உள்ள துணை நிறுவனங்களின் தலைவராக பொறுப்பு வகித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x