Published : 27 May 2016 11:17 AM
Last Updated : 27 May 2016 11:17 AM

இவரைத் தெரியுமா?- ஆனந்த் அகர்வால்

ஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார். 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார்.

2001ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், நிறுவனத்தின் ஆப்டிகல் பைபர் தொழிலின் பொது மேலாளராகவும் பணியாற்றியவர்.

1995 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர். உற்பத்தி, தர உறுதி மற்றும் தொழில் மேம்பாடு போன்ற துறைகளில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

ஐஐடி கோரக்பூர் கல்வி நிறுவனத்தில் பிடெக் பட்டம், அமெரிக்காவின் ரென்சிலார் கல்வி நிறுவனத்தில் எம்எஸ்சி பட்டமும், தத்துவத்தில் பிஹெச்டி பட்டமும் பெற்றுள்ளார்.

ஸ்டார்ட்அப், உத்திகள் வகுப்பது, இணைப்பு மற்றும் கையகப்படுத்துவது, தொலைத் தொடர்பு போன்ற துறைகளில் வல்லுநர்.

சீமென்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சர்வதேச அளவில் பல பத்திரிகைகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x