Published : 17 Feb 2017 10:33 AM
Last Updated : 17 Feb 2017 10:33 AM

இவரைத் தெரியுமா?- அர்ஜூன் பிரதாப்

பெங்களூருவைச் சேர்ந்த மனிதவள நிறுவனமான எட்ஜ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

டெக்ஸ்லர் இன்பர்மேஷன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு உதவி துணை தலைவராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

அக்கமய் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் முக்கிய கணக்கு அதிகாரியாகவும், ஸ்பீட்ஈரா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தில் தொழில் மேம்பாடு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

திறன் வளர்ப்பு, வேலைவாய்ப்பு தீர்வுகள், தொழில்நுட்ப முறையிலான பணியாளர் பயிற்சி, தொழில் மேம்பாடு, உத்திகள் ரீதியான ஒப்பந்தம் உள்ளிட்டவற்றில் வல்லுநர்.

விப்ரோ, டீம்லீஸ், ஹெச்சிஎல், மைக்ரோலேண்ட் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுக்கு பணியாளர்களை இந்த நிறுவனம் தேர்வு செய்கிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் சிட்னியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச தொழில்கள் பிரிவில் மேலாண்மை உயர்கல்வி பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x