Last Updated : 09 Feb, 2016 09:39 AM

 

Published : 09 Feb 2016 09:39 AM
Last Updated : 09 Feb 2016 09:39 AM

இந்தியாவில் அடுத்த இரண்டாண்டுகளில் 50 கோடி செல்போன் உற்பத்தி செய்யப்படும்

இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 கோடி செல் போன்கள் உற்பத்தி செய்யப்படும் என்று தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது. செல்போன் தயாரிப்பில் சர்வதேச அளவில் உற்பத்தி கேந்திரமாக இந்தியா உருவாகும். அதற்கு ஏற்ப தொழில் கொள்கைகளும், திறமையான நபர்களும் இந்தியாவில் உள்ளனர். இதனால் உற்பத்தி அடுத்த இரு ஆண்டுகளில் 50 கோடியைத் தாண்டும் என்று தொலைத் தொடர்புத்துறை (டிஓடி) கணித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு இந்தியாவில் 10 கோடி செல்போன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்ததன் மூலம் 10 கோடி செல்போன்கள் உற்பத்தி என்கிற அளவு எட்டப்பட்டுள்ளது. அதற்கு முன்பு இந்தியாவில் உற்பத்தி அளவு 1 கோடியாக இருந்தது. தற்போதைய நிலவரப்படி அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 கோடி செல்போன்கள் உற்பத்தி என்கிற அளவை எட்டுவோம் என்று தொலைத் தொடர்புத்துறை செயலர் ஜே.எஸ். தீபக் குறிப்பிட்டுள்ளார்.

தொலைத்தொடர்பு மற்றும் ஒளிப்பரப்பு சார்ந்த கருத்தரங்கில் இத்தகவலைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது;

செல்போன்கள் தயாரிப்பில் மட்டுமல்ல, உள்நாட்டு உற்பத்தி யாளர்கள் பலரும் தங்களது துறை சார்ந்த வகையில் பல்வேறு கருவிகளையும் தயாரிக்கின்றனர். குறிப்பாக மருத்துவ மின்னணு கருவிகள், நுகர்வோர் கருவிகள், அலைவரிசை கருவிகள் என பல்வேறு வகைகளில் தயாரித்துள் ளனர். இதற்கு அடிப்படையாக திறன் மிக்கவர்களும், தொழில் துறையை ஊக்குவிக்கும் அரசின் கொள்கையும் பக்கபலமாக உள்ளது. மேலும் இந்தியா குறைந்த விலை போன்கள் தயாரிப்பில் சர்வதேச அளவிலான உற்பத்தி கேந்திரமாக உருவாகும் வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டார்.

செல்போன் உற்பத்திக்கு தேவையாக மின்னணு உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதைக் குறைத்து, அவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஏற்ப மேக் இன் இந்தியா திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. குறிப்பாக மைக்ரோமேக்ஸ், லாவா, ஜியோனி, லெனோவா, ஒன்பிளஸ் மற்றும் ஜியோமி நிறுவனங்கள் தங்களது ஒருங்கிணைப்பு தொழில்களை இந்தியாவில் தொடங்கியுள்ளன.

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் இந்தியா சர்வதேச அளவில் வேக மாக வளர்ந்து வருகிறது. தயாரிப் பாளர்கள் இந்திய சந்தையை பயன்படுத்த தங்களது ஆலைகளை இங்கு அமைத்து உற்பத்தி செய்து கொடுக்க வேண்டும்.

ஆப்பிள் செல்போன் உள்பட பல மின்னணு பொருட்களை தயாரிக்கும் சர்வதேச ஒப்பந்த உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான், இந்தியாவில் 12 இடங்களில் ஆலைகளை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு, மின்னணு கருவிகள் தயாரிக்கும் முன்னணி உற்பத்தியாளர்களிடமிருந்து திருத்தியமைக்கபட்ட சிறப்பு ஊக்க திட்டத்தின் கீழ் 1.13 லட்சம் கோடி முதலீட்டுக்கான திட்டங்களை பெற்றுள்ளது.

கிராமப்புற பகுதிகளில் உள்ள தனிநபருக்கும் விரைவான அகண்ட் அலைவரிசை கிடைப்பதற்காக கருவிகளை நிறுவனங்கள் உற்பத்தி செய்வதற்கு அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 40 கோடி என்கிற அளவை தொட்டுள்ளது. கிராமப் புறங்களில் அகண்ட அலை வரிசையை பயன்படுத்துபவர்கள் 4 முதல் 5 கோடி பேர்களாக உள்ளனர். கிரமப்புறங்களில் 7 சதவீதம் மக்களே இணையம் பயன்படுத்துகின்றனர். இதனால் டிஜிட்டல் கருவிகள் அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும். இந்த துறை தேவைகளை எதிர்பார்த்துள்ளது என்றும் தீபக் குறிப்பிட்டார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x