Published : 30 Jul 2014 11:23 AM
Last Updated : 30 Jul 2014 11:23 AM

ஆர்.ஸ்ரீகிருஷ்ணா - இவரைத் தெரியுமா ?

$ ஹெக்சாவேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக திங்கள் கிழமை நியமிக்கப்பட்டார். முந்தைய சி.இ.ஓ. சந்திரசேகர் துணைத்தலைவர் பொறுப்பை ஏற்றதால் சி.இ.ஓ.வாக கிருஷ்ணா நியமிக்கப்பட்டார்.

$ ஹெக்சாவேர் நிறுவனத்தில் இணைவதற்கு முன்பு ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் 20 வருடங்கள் பணிபுரிந்தார்.

$ ஹெச்சிஎல் நிறுவனத்தில் இன்பிராஸ்டிரக்சர் சேவை மற்றும் லைப் சயின்ஸ் அண்ட் ஹெல்த்கேர் பிரிவின் தலைவராக இருந்தார். இன்பிராஸ்டிரக்சர் சேவை பிரிவை ஆரம்பித்து 130 கோடி டாலர் அளவுக்கு வியாபாரம் ஈட்டும் நிறுவனமாக மாற்றினார்.

$ ஐஐடி சென்னையில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்கும், ஐஐஎம் கொல்கத்தாவில் நிர்வாக பட்டமும் பெற்றவர்.

$ சர்வதேச பொருளாதார பேரவையின் சிறந்த இளம் சர்வதேச தலைவராக 2010-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டார்.

$ அடுத்த 60-90 நாட்களுக்குள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தேவையான முக்கிய முடிவுகளை எடுக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x