Published : 26 Jan 2015 02:20 PM
Last Updated : 26 Jan 2015 02:20 PM

வெற்றி மொழி - நெப்போலியன் ஹில்

1883-ஆம் ஆண்டு பிறந்த நெப்போலியன் ஹில், அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். 1908-ஆம் ஆண்டு, புகழ்பெற்ற தொழிலதிபர் ஆண்ட்ரூ கார்னெகியை சந்தித்ததே நெப்போலியன் ஹில்லின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. வெற்றிக்கான கார்னெகியின் எளிய செயல்முறை, ஹில்லின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நெப்போலியன் ஹில்லின் “திங்க் அண்ட் க்ரோ ரிச்” என்னும் புத்தகம், மிகவும் பிரபலமாக விற்பனையான சிறந்த புத்தகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கை முறைக்கான இவரது கருத்துகள் உலகளவில் மிகவும் புகழ்பெற்றவை.



# மனிதனின் மனம் எதை நம்பிக்கையுடன் திட்டமிடுகிறதோ, அதை அடைந்தே தீரும்.

# உங்களால் பெரிய விஷயங்களைச் செய்யமுடியவில்லை என்றால், சிறிய விஷயங்களைச் சிறந்த வழியில் செய்து பாருங்கள்.

# எப்போது உங்கள் ஆசைகள் போதுமான வலுவுடன் இருகின்றதோ, அப்போது அதனை அடைவதற்கான அதிகபட்ச சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.

# எதற்காகவும் காத்திருக்க வேண்டாம், இந்த நிமிடமே சரியான நேரம்.

# முயற்சியில்லாதவர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை; வெற்றியாளர்கள் ஒருபோதும் முயற்சியை விடுவதில்லை.

# நம்மால் நமது மனதிற்குள் அமைத்திருப்பதே, நம்முடைய ஒரே வரம்புகள் ஆகும்.

# நமது செயல்பாடே, அறிவுத்திறனுக்கான உண்மையான அளவுகோலாகும்.

# அறிவை நோக்கி தொடர்ந்து செல்லும் பாதையே, வெற்றிக்கான வழி.

# நமது இலக்கு என்பது, காலக்கெடுவுடன் கூடிய கனவே.

# எதை நாம் சரியாக புரிந்துக்கொள்ளவில்லையோ, அதையே நாம் நம்ப மறுக்கின்றோம்.

# மற்றவர்களின் இயலாமையைப்பற்றி பேச வேண்டும் என்றால், பேசாமலிருப்பதே சிறந்தது.

# விருப்பமே, அனைத்து வெற்றிகளுக்குமான முதல் படியாகும்.

# உங்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பானது, நீங்கள் இப்பொழுது எங்கிருக்கீறீர்களோ அங்கேயேகூட இருக்கலாம்.

# பேசுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளுங்கள், ஏனென்றால் உங்கள் வார்த்தைகள் மற்றொருவரின் மனதில் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை விதைக்கக்கூடும்.

# தொடர்ச்சியான முயற்சி மற்றும் போராட்டத்தின் மூலமே, வலிமை மற்றும் வளர்ச்சி நமக்கு கிடைகின்றது.

# போராட்ட குணத்தைக் கைவிட மறுப்பவர்களுக்கு, வெற்றி எப்பொழுதும் சாத்தியமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x