Last Updated : 24 Apr, 2017 11:05 AM

 

Published : 24 Apr 2017 11:05 AM
Last Updated : 24 Apr 2017 11:05 AM

வீட்டு வாடகை வரிச்சலுகை: நேர்மையே சிறந்த கொள்கை

வருமான வரி தாக்கல் செய்யும் போது வீட்டு வாடகை வரிச் சலுகைக்கு போலியான ரசீதை பெரும்பாலானோர் அளிப்பது வழக்கம். இப்படி போலியான ரசீதை அளிப்பவர்கள் வரித்துறையினர் கண்காணிப்புக்குள் வந்துவிடுவோமோ? என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் வீட்டு வாடகை வரிச்சலுகை கோருபவர்களை கண்காணிக்க வரித்துறை திட்டமிட்டு வருகிறது.

சமீபத்தில் மும்பை வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இதுதொடர்பாக சில விதிமுறைகளை பிறப்பித்துள்ளது. வீட்டு வாடகை வரிச்சலுகையில் போலியான ரசீது அளிப்பவர்களை தடுக்கும் விதமாகவும் உண்மையான ரசீது தாக்கல் செய்வதற்காகவும் இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வரி கணக்கீடு

சம்பள கட்டமைப்பில் வீட்டு வாடகை சலுகை ஒரு பகுதி என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. தனி நபர்கள் இந்த வாடகை சலுகையை பயன்படுத்தி வரி விலக்கு கோரமுடி யும். ஆனால் வீட்டு வாடகை வரிச் சலுகைக்கான தொகையை மூன்று வழிகளில் கணக்கிடுகின்றனர். அதாவது ஒரு தனிநபர், ஒட்டுமொத்த நிதியாண் டில் சம்பள கட்டமைப்பில் வீட்டு வாடகை சலுகையின் கீழ் எவ்வளவு தொகை பெறுகிறார் என்பது கணக் கிடப்படுகிறது; தனிநபரின் சம்பளத்தில் 10 சதவீதத்தை உண்மையாக செலுத்தி யுள்ள வாடகையில் கழிக்கப்படுகிறது; பெருநகரத்தில் இருந்தால் சம்பளத்தில் 50 சதவீதம் கழிக்கப்படுகிறது. நகரமாக இருந்தால் 40 சதவீதம் வாடகையி லிருந்து கழிக்கப்படுகிறது.

வரிச்சலுகைக்கான ஆவணங்கள்

தற்போது வரை வீட்டு வாடகை வரிச்சலுகை கோருவதற்கு வாடகை ரசீது போதுமானது. இந்த முறை பின்பற்றப்படுவதால் போலி ரசீதுகளை சமர்ப்பிக்க எளிதாக இருக்கிறது.

"வீட்டு வாடகை வரிச்சலுகை கோருவதற்கு வலுவான அடிப்படை ஆவணங்களை பின்பற்ற வேண்டிய தேவை இருப்பதாக சமீபத்தில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வீட்டு வாடகை வரிச்சலுகை கோருபவர்கள் நேர்மையான பரிமாற்ற ஆவணங்களை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்" என்று கேபிஎம்ஜியின் சர்வதேச மொபிலிட்டி சர்வீசஸ் பிரிவின் தலைவர் பரிஷாத் சிர்வாலா தெரிவித்தார்.

"நீங்கள் வீட்டு வாடகை வரிச்சலுகை கோரும்போது இரண்டு விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். ஒன்று உண்மையாக நீங்கள் எவ்வளவு வாடகை கொடுக்கிறீர்கள், இரண்டு நீங்கள் அளிக்கும் வாடகை உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாடகை சலுகைக்குள் வருகிறதா? என்பதை பார்க்கவேண்டும்" என்று நான்ஜியா அண்ட் கோ நிறுவனத்தின் நீத்து பிரஹ்மா தெரிவித்துள்ளார்.

நேர்மையாக வீட்டு வாடகை அளிக்கும் நீங்கள் வாடகை அளித்ததற் கான ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதையே தாக்கல் செய்ய வேண்டும். தற்போது அரசு வீட்டு வாடகை அளிப்பதற்கு பணமில்லா பரிவர்த்தனையை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. காசோலை மூலமாகவும் பணமில்லா பரிவர்த்தனை மூலமாகவும் வீட்டு வாடகை செலுத்தும் போது எவ்வளவு உண்மையாக வாடகை செலுத்தியுள்ளார்கள் என்பதைக் கண்டறிய முடியும்.

உங்களுடைய வீட்டு உரிமையாளர் பணப் பரிவர்த்தனையை மட்டுமே ஏற்றுக் கொண்டால் கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் எவ்வளவு வாடகை தொகை அளிக்க வேண்டுமோ அந்தத் தொகையை நீங்கள் வங்கியிலிருந்து எடுத்து அளிக்கலாம். நீங்கள் இதைத் தொடர்ந்து செய்யும் போது நீங்கள் வீட்டு வாடகைக்குத் தான் இதை பயன்படுத்தி உள்ளீர்கள் என்பதை சான்றாக சமர்ப்பிக்க முடி யும். மேலும் நீங்கள் அனுமதிக்கப்பட்ட வாடகையில்தான் தற்போது வசித்து வருகிறீர்கள் என்றால் உங்கள் வீட்டி னுடைய மின்சாரக் கட்டணம், சமையல் எரிவாயு கட்டணம் ஆகியவற்றை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண் டும். இந்த ஆவணங்கள் இருந்தால் வரித்துறையினர் விசாரணைக்கு பயப்பட தேவையில்லை.

இதையொட்டி தற்போதைய பட்ஜெட்டிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நீங்கள் ஒரு மாதத்துக்கு ரூ. 50,000க்கு மேல் வீட்டு வாடகை செலுத்தினால் உங்களின் வரியில் 5 சதவீதம் கழிக்கப்படுகிறது. இது வருகின்ற ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. மேலும் வருடத் திற்கு 1 லட்ச ரூபாய்க்கு மேல் வீட்டு வாடகைச் செலுத்தினால் உங்கள் வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை தெரி விப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கட்டுப்பாடுகள் நிச்சயம் போலியாக ரசீது அளிப்பவர்களைக் கட்டுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தனிநபராக நேர்மையாக உண்மையான தகவல்களை அளித்தால் மட்டுமே நாட்டின் வளர்ச்சி சாத்தியம்.

- gurumurthy.k@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x