Published : 27 Jun 2016 10:16 AM
Last Updated : 27 Jun 2016 10:16 AM

கபாலி மேஜிக் பலிக்குமா?

நெருப்புடா, மகிழ்ச்சி. சமீபத்தில் அதிகம் உச்சரிக்கப்பட்ட அல் லது கேட்கப்பட்ட வார்த்தை யாக இருக்கும். கபாலி கதையை பற்றிய கட்டுரை அல்ல இது. சினிமா என்பது சினிமா மட்டுமல்ல, அதனைச் சார்ந்து பெரிய வியாபாரமும் இருக்கிறது. டிக்கெட் விற்பனை தவிர பெரிய சினிமா வியாபாரம் இருக்கிறது. ஆனால் அனைத்து படங்களுக்கும் இதுபோன்ற வியா பாரம் கிடைப்பதில்லை. மிகச்சில படங்களில் கபாலியும் ஒன்று.

கபாலியின் வர்த்தகம் 200 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய அளவில் முன்னணியில் இருக்கும் சில நிறுவனங்கள் கபாலி யுடன் கைகோர்க்க முடிவெடுத் திருக்கின்றன. சில நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. ஆடியோ உரிமம் திங்க் மியூசிக் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. தவிர பல முன்னணி நிறுவனங்களுடன் இணைவது உள்ளிட்ட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

தவிர கபாலிக்கென தனியாக ஆண்ட்ராய்ட் செயலி வெளியிடப் பட்டிருக்கிறது. இதன் மூலம் கபாலி பற்றிய செய்திகள், பார்வை யாளர்களுக்கான போட்டிகள் என ரசிகர்களை தக்கவைத்துக் கொள்வதும் நடந்து வருகிறது. மலாய், தாய், மற்றும் சீன மொழி களில் வெளியாகும் முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் மலேசியாவில் தலா 500 திரைகளில் கொண்டு வர திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏர் ஏசியா

கபாலியுடன் இணைந்துக் கொள்ள ஏர் ஏசியா முந்திக் கொண்டுள்ளது. மலேசியாவில் வசிப்பவர்களுக்கு ஒரு போட்டி வைத்துள்ளது ஏர் ஏசியா. கிரியேட்டிவாக வீடியோ அனுப்பும் ஒருவர் சென்னையில் வந்து கபாலி படத்தை நண்பருடன் பார்க்க முடியும். தவிர மூன்று நாட்கள் சென்னையில் தங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

கபாலி படத்தின் சென்சார் பணி கள் இன்னும் முடிவடையவில்லை என்பதால் எப்போது வெளியிடப் படும் என்று இன்னும் முறையாக அறிவிக்கப்பட இல்லை, என்றாலும் ஜூலை 15-ம் தேதி வெளியாகும் என்று விநியோகஸ்தர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

இதற்காக பெங்களூரு ரசிகர்க ளுக்காக ஒரு பேக்கேஜினை ஏற் பாடு செய்திருக்கிறது ஏர் ஏசியா இந்தியா. முதல் நாள் முதல் காட்சிக் காக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு விமான பயணம். அங்கிருந்து தியேட்டர். டிக்கெட் கட்டணம், உணவு, ஆடியோ சிடி பிறகு அன்று மாலையே பெங்களூரு பயணம் என கபாலிக்காக ஒரு பேக்கேஜ் வடிவமைத்திருக்கிறது ஏர் ஏசியா இந்தியா.

மொத்த பாக்கேஜுக்கு ரூ.7,860 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. தவிர பெங்களூரு-சென்னை விமானத்தின் வெளிப்புற பகுதியை கபாலி என பெயின்ட் செய்யவும் ஏர் ஏசியா திட்டமிட்டிருக்கிறது.

இது தவிர கபாலி டி ஷர்ட் மற்றும் கீ செயின்கள் வரும் ஜூலை முதல் அமேசானில் விற்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும் கேட்பரி, ஏர்டெல் தவிர மேலும் 100 நிறுவனங்கள் கபாலியுடன் தங்களை இணைத்துக்கொள்ள திட்டமிட்டு வருகின்றன.

ரசிகர்களை விட நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதுதான் கபாலி தொடங்கிவைக்கும் பாதை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x