Published : 18 Jun 2018 11:30 AM
Last Updated : 18 Jun 2018 11:30 AM

வெற்றி மொழி: நிக்கி ஜியோவன்னி

1943-ம் ஆண்டு பிறந்த நிக்கி ஜியோவன்னி அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர், வர்ணனையாளர், சமூக ஆர்வலர் மற்றும் கல்வியாளர். உலகின் மிகவும் பிரபலமான ஆப்பிரிக்க அமெரிக்க கவிஞர்களில் ஒருவர். கவிதை நூல்கள், கட்டுரைகள், கவிதைப்பதிவுகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் ஆகியன இவரது படைப்புகளில் அடங்கும். இனம் மற்றும் சமூகப் பிரச்சினைகளிலிருந்து குழந்தைகள் இலக்கியம் வரையிலான தலைப்புகளை உள்ளடக்கியது இவரது ஆக்கங்கள். தனது கவிதை ஆல்பத்திற்காக கிராமி விருதுக்கான பரிந்துரை உட்பட பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்.

# நிறைய பேர் மாற்றத்தை எதிர்க்கிறார்கள், எனவே அவர்கள் தங்களைத் தாங்களே அனுபவிக்க ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

# மாற்றம் எதுவாக இருந்தாலும், அதை தழுவி ஏற்றுக்கொள்ளுங்கள்; ஒருமுறை இதை செய்தால், நீங்கள் இருக்கும் புதிய உலகத்தைப்பற்றி உங்களால் அறிந்துகொள்ள முடியும்.

# தவறுகள் என்பவை வாழ்க்கையின் உண்மை.

# கவிதை மற்றும் இசை ஆகிய இரண்டும் மிகச்சிறந்த நண்பர்கள்.

# இப்போது உண்மைக்கான சிறந்த நேரம் இல்லையென்றால், நாம் அதை பெறப்போகின்ற நேரத்தை நான் பார்க்கவில்லை.

# நாம் நேசிப்பவர்களுக்கு நாம் பொறுப்பாளிகள் என்பர் சிலர். நம்மை நேசிப்பவர்களுக்கு நாம் பொறுப்பாளிகள் என்பதை அறிந்திருப்பர் மற்றவர்.

# நாம் அன்பு செலுத்துகிறோம், ஏனென்றால் இது ஒன்றே உண்மையான சாகசம்.

# அனைத்தும் மாறும். ஒரே கேள்வி என்னவென்றால், வளர்கிறதா அல்லது அழிகிறதா என்பதே.

# நீங்கள் உங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், நீங்கள் வேறு யாரையும் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.

# விருப்பம் இல்லாதவர்களுக்கு எதுவும் எளிதானது அல்ல.

# உங்கள் சொந்த சிந்தனைகளால் நீங்கள் முடக்கப்படாமல் இருக்க வேண்டும்.

# மரியாதைக்குரிய ஒரு நபராக உங்களை நீங்கள் நடத்துங்கள்.

# கற்றுக்கொள்வதாலேயே அது கல்வி என்று அழைக்கப்படுகிறது.

# எழுதுதல் என்பது வாசிப்புடன் கூடிய ஒரு உரையாடலாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x