Published : 18 Jun 2018 11:27 AM
Last Updated : 18 Jun 2018 11:27 AM

திருமலையில் பேட்டரி கார்!

சு

ற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் நடவடிக்கையாக திருமலையில் 50 பேட்டரி கார்களை பயன்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த காரை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் பல்வேறு பயன்களை மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் 50 கார்களை முதல் கட்டமாக டிடிடி அதிகாரிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது திருப்பதி தேவஸ்தானம்.

மாநிலத்தில் 350 பேட்டரி கார்களைப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 50 கார்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதியிலிருந்து இது செயல்பாட்டுக்கு வரும். இந்த கார்களுக்காக மத்திய அரசு நிறுவனமான இஇஎஸ்எல் நிறுவனத்துடன் ஆந்திர மாநில அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முதல் கட்டமாக 50 வாகனங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் இயக்கப்படும். இது திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கானதாகும்.

மாநிலத்தில் உள்ள புதிய புதுப்பிக்கத்தக்க மரபு சாரா எரிசக்தி மேம்பாட்டு கார்ப்பரேஷன் (என்ஆர்இடிசிஏபி) ஒரு வாகனத்துக்கு ரூ 20 ஆயிரம் தொகையை மாதந்தோறும் வழங்கும். இதே அளவு தொகை (ரூ. 20 ஆயிரம்) டிரைவர் சம்பளம் உள்ளிட்டவற்றுக்கு அளிக்கப்படும். இந்த பேட்டரி காரை இயக்கும் டிரைவர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்க்படும். 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வாகனம் சம்பந்தப்பட்ட துறைக்கு (ஆந்திர அரசுக்கு) சொந்தமாகும். இந்த பேட்டரி கார் ஒவ்வொன்றின் விலை ரூ. 11 லட்சமாகும்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒதுக்கிய 50 கார்கள் தவிர்த்து எஞ்சியுள்ள 300 பேட்டரி கார்கள் விஜயவாடா முனிசிபல் கார்ப்பரேஷன், திருப்பதி முனிசிபல் கார்ப்பரேஷன், கிரேட்டர் விசாகப்பட்டினம் முனிசிபல் கார்ப்பரேஷன், ஆந்திர பிரதேசம் தெற்கு மின் விநியோக லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றுக்கும் அமராவதி தலைமைச் செயலகத்துக்கும் 350 கார்களும் பிரித்து விநியோகிக்கப்படும். இணை ஆணையர்கள், இணை இயக்குநர்கள் அந்தஸ்திலான அதிகாரிகளுக்கு இந்த கார்கள் பயன்படுத்தப்படும். மிகக் குறைந்த அளவிலான பயணம் மேற்கொள்வோருக்கு பேட்டரி கார்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கி.மீ. தூரம் பயணிக்கும். இந்த கார்கள் சார்ஜ் செய்ய ஏசி சார்ஜராக இருந்தால் 6 மணி நேரமும், டிசி சார்ஜராக இருந்தால் 90 நிமிஷமும் ஆகும். இந்த கார்களின் பயண செலவு ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 2 ஆக இருக்கும். இந்த கார் செயல்பாட்டுக்கு வரும்போது உலகிலேயே முதன் முதலில் பேட்டரி கார்களை உபயோகப்படுத்திய ஆலய நிர்வாகம் திருப்பதிதான் என்ற பெருமையும் பாலாஜியையே சாரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x