Published : 21 May 2018 10:12 AM
Last Updated : 21 May 2018 10:12 AM

திருச்சி என்ஐடி-யுடன் டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம்

தி

ருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப மையத்துடன் (என்ஐடி) டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. கல்வியில் புதுமையான திட்டங்களை வகுத்து அளிப்பது மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடுவது ஆகியவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமே திருச்சி என்ஐடி மற்றும் டாடா மோட்டார்ஸ் பரஸ்பரம் பயனடையும் வகையிலான பகுதிகளில் தொடக்க நிலை பேச்சிலிருந்து ஆராய்ச்சி மேற்கொள்வது வரை இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்படும்.

தொழில்துறையைச் சேர்ந்த நிறுவனம் கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதன் மூலம் தொழில்துறைக்குத் தேவையான மாணவர்களை உருவாக்கவும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இரண்டு நிறுவனங்களும் கூட்டாக சேர்ந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் செயல்படுவது பொறியியல் பிரிவில் புத்தாக சிந்தனைகளைக் கொண்டுவந்து புதிய தளங்களை ஏற்படுத்துவதும் இதில் அடங்கும்.

இதன் மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்கள் நேர்முக பயிற்சிக்கு டாடா மோட்டார்ஸ் செல்வதற்கும் வழி ஏற்பட்டுள்ளது.

தொழில் துறையினரின் தேவைக்கேற்ப மாணவர்களைத் தயார்படுத்தும் நடவடிக்கையில் தொழில் நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்வதன் மூலம் படிப்பு முடித்தவுடன் தொழில்துறைக்குத் தகுதியான மாணவர்கள் உருவாவதற்கு இதுபோன்ற ஒப்பந்தங்கள் வழி வகை செய்யும். டாடா மோட்டார்ஸைத் தொடர்ந்து மேலும் பல நிறுவனங்கள் இத்தகைய முயற்சியில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x