Published : 04 Dec 2017 11:14 AM
Last Updated : 04 Dec 2017 11:14 AM

குறைந்த வருவாய் மாநிலங்களில் அதிகரிக்கும் வாகன விற்பனை!

னி நபர் வருமானம் குறைவாக உள்ள மாநிலங்களில் தற்போது இருசக்கர வாகன விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக பிஹார், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சமீபகாலமாக இரு சக்கர வாகன விற்பனை அதிகரித்துள்ளது.

இந்த மாநிலங்களில் பெண் கல்வி அதிகரிப்பு, கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றால் செலவிடும் போக்கு அதிகரித்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த ஆறு மாநிலங்களில் வாகன விற்பனை நடப்பு ஆண்டின் 6 மாதங்களில் 7% முதல் 15% வரை அதிகரித்துள்ளது. மொத்த வாகன விற்பனையில் இந்த மாநிலங்களின் பங்களிப்பு 23% முதல் 45% வரை உள்ளது.

இம்மாநிலங்களின் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.65 ஆயிரம் முதல் 1.05 லட்சம் ரூபாயாக உள்ளது. இந்தியாவின் சராசரி தனி நபர் வருமானம் 1.17 லட்சம் ரூபாயாக உள்ளது.

பொதுவாக வாகனங்களின் விலை டெல்லியில் குறைவாக இருக்கும். அதுவே பிஹார், உத்தரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமாக இருக்கும். இதற்கு அந்தந்த மாநிலங்களில் விதிக்கப்படும் வரி விதிப்பு முறையும் ஒரு காரணம். ஆனால் தற்போது ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளதால் நாடு முழுவதும் வாகனங்களின் விலை ஒரே சீராக உள்ளது. இதுவும் வாகன விற்பனை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்று ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குநர் ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் பெண்கல்வியறிவு அதிகமாக உள்ளது. இங்கு பெண்கள் ஸ்கூட்டர்களை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. விலை குறைவு காரணமாக கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது விற்பனை அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x