Published : 09 Oct 2017 10:19 AM
Last Updated : 09 Oct 2017 10:19 AM

ஸைலோவுக்கு மாற்று மஹிந்திரா டியுவி 300 பிளஸ்!

ஸ்யுவி வாகன சந்தையில் முன்னணியில் உள்ள மஹிந்திரா குழுமத்தின் சமீபத்திய அறிமுகம் மஹிந்திரா டியுவி 300 பிளஸ். டியுவி 500 அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மஹிந்திரா நிறுவனம் டியுவி 300 பிளஸ் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான மாடலாக உள்ள ஸைலோவை படிப்படியாக விலக்கிக்கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2009-ம் ஆண்டில் ஸைலோ அறிமுகமானது. இதன் மேம்படுத்தப்பட்ட மாடல் 2012-ல் வெளிவந்தது. இது பெரும்பாலும் பயண ஏற்பாட்டாளர்களின் தேர்வாகவே இருந்தது. ஆனாலும் இது பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே இதை விலக்கிக் கொள்ளும் முடிவை நிறுவனம் ஏற்கெனவே எடுத்துவிட்டது.

புதிதாக அறிமுகமாகியுள்ள டியுவி 300 பிளஸ் மாருதி எர்டிகாகவுக்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு மாடல்களில் இது வெளிவந்துள்ளது டி10, டி10 டியூயல்டோன், டி10 ஏஎம்டி மற்றும் டி 10 ஏஎம்டி டியூயல் டோன் என அறிமுகமாகியுள்ளது. இதன் விலை ரூ. 9.75 லட்சத்தில் தொடங்கி ரூ. 10.65 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எம்பிவி ரகமாக வந்துள்ள இந்த மாடல் கார் எஸ்யுவி மாடல்களில் உள்ள சிறப்பம்சங்களைக் கொண்டதாக உள்ளது. அலாய் சக்கரம், கருமை நிற குரோம், பனி சூழ் பகுதிகளில் ஒளியைப் பீச்சும் ஃபாக் விளக்குகள், உறுதித் தன்மையை நிலைநாட்டும் கிரில் ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும்.

7 அங்குல தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் பயணத்தை இசையோடு கூடியதாகச் செய்ய உதவுகிறது. ` மேப் மை இந்தியா’, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நேவிகேஷன், மஹிந்திரா புளூ சென்ஸ் செயலி ஆகியன இதில் கூடுதல் சிறப்பம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முன்பகுதியில் 2 ஏர்பேக்குகளும், ஏபிஎஸ் மற்றும் இபிடி மற்றும் குழந்தைகளுக்காக ஐஎஸ்ஓபிக்ஸ் ஆகிய வசதிகள் உள்ளன. 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் 5 கியர்களைக் கொண்டதாக 6 வண்ணங்களில் இது வெளிவந்துள்ளது.

எஸ்யுவி விற்பனையில் மஹிந்திரா நிறுவனத்தின் முதலிட அந்தஸ்து தொடர இப்புதிய வரவு நிச்சயம் உதவும் என்றே தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x