Published : 11 Sep 2017 11:08 AM
Last Updated : 11 Sep 2017 11:08 AM

புதிய வண்ணத்தில் ராயல் என்பீல்டு

ரா

யல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் என்பதை விட புல்லட் என்றால் அனைவருக்கும் பரிச்சயம். பிரீமியம் மோட்டார் சைக்கிளில் இந்திய சாலைகளில் ராஜாவாக கோலோச்சி வரும் ஐஷர் மோட்டார்ஸின் அங்கமான ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது 2 கண்கவர் வண்ணங்களில் தனது மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 350 சிசி திறன் கொண்ட கிளாசிக் மோட்டார் சைக்கிள் தற்போது கன் மெட்டல் கிரே நிறத்தில் வெளி வந்துள்ளது. இதேபோல 500 சிசி மாடல் மோட்டார் சைக்கிள் ஸ்டெல்த் பிளாக் எனும் கருமை நிறத்தில் வெளி வந்துள்ளது.

இவ்விரு மாடல்களுமே முன்சக்கரம் மற்றும் பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக் வசதியோடு அறிமுகமாகியுள்ளது.

ராயல் என்பீல்டு கிளாசிக் வரிசையில் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருப்பது இவ்விரு வண்ண மோட்டார் சைக்கிளில் மட்டுமே.

350 சிசி கிளாசிக் விலை ரூ. 1.60 லட்சம் விலையிலும் கிளாசிக் 500 சிசி மோட்டார் சைக்கிள் ரூ. 2.05 லட்சம் விலையிலும் அறிமுகமாகியுள்ளது.

புல்லட் வாகனம் கடந்து போகும்போதே அது அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். அதுவும் கண்கவர் நிறத்தில் வந்துள்ளது என்றால் புல்லட் பிரியர்களுக்கு கொண்டாட்டம்தானே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x