Published : 23 Jan 2017 12:11 PM
Last Updated : 23 Jan 2017 12:11 PM

5-வது படித்தவரின் ஆண்டு சம்பளம் ரூ. 21 கோடி

கல்விக்கும் பணம் சம்பாதிப்பதற்கும் எப்போதுமே தொடர்பு இருந்தது கிடையாது. இந்தியாவிலேயே 94 வயதிலும் ஆண்டுக்கு ரூ.21 கோடி சம்பளம் பெறும் ஒருவர் இருக்கிறார். அவர்தான் எம்டிஹெச் நிறுவனத்தின் நிறுவனர் தரம்பால் குலாட்டி. இவர் படித்ததோ 5-ம் வகுப்பு வரைதான்.

எம்டிஹெச் மசாலா பொடி தயா ரிப்புகளின் அட்டைப் படத்தில் டர்பன் அணிந்தபடி காட்சிதரும் 94 வயது தாத்தாதான் தரம்பால் குலாட்டி.

கோத்ரெஜ் நிறுவனத்தின் ஆதி கோத்ரெஜ், ஹிந்துஸ்தான் யுனி லீவரின் சஞ்ஜீவ் மேத்தா, ஐடிசி நிறு வனத்தின் தேவேஷ்வர் ஆகியோரைக் காட்டிலும் அதிக சம்பளம் பெறு பவரும் இவரே.

`தாதாஜி’ என்றும் `மஹாஷாயாஜி’ என்றும் அன்புடன் அழைக்கப்படு கிறார். மஹாஷியான் டி ஹட்டி என் பதன் சுருக்கமே எம்டிஹெச் ஆகும். 2015-ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் 15% அதிகரித்து ரூ.924 கோடியை எட்டியுள்ளது. லாபம் 24% அதிகரித்து ரூ. 213 கோடியாக இருந்தது. இந்நிறுவனத்தின் 80% பங்குகள் இவர் வசமே உள்ளன.

94 வயதிலும் தினசரி அலுவலகம் சென்று அன்றாட பணிகளைப் பார்ப் பது, சந்தைப் பிரதிநிதிகள் மற்றும் விநியோகஸ்தர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமையிலும் ஓய்வின்றி பணிகளை தொடர்கிறார்.

தரமான பொருள்களை கட்டுப் படியாகும் விலையில் இந்திய நுகர்வோருக்கு அளிக்க வேண்டும் என்பதே தனது இலக்கு என்று கூறுகிறார் இந்த முதிய இளைஞர்.

பாகிஸ்தானின் சாயல் கோட் பகுதி யில் இவரது தந்தை மிகச் சிறிய பெட்டிக் கடையை நடத்தி வந்தார். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னரே இந்திய பகுதிக்கு குடி பெயர்ந்து, டெல்லியில் கரோல் பாக் பகுதியில் முதலாவது கடையைத் திறந்தார். அன்று அவர் தொடங்கிய தொழில் இன்று ரூ.1,500 கோடி மதிப்பிலான மசாலா சாம்ராஜியமாக உருவாகி உள்ளது. 15 ஆலைகள் 1,000 விநியோகஸ்தர்கள் மூலம் எம்டிஹெச் தயாரிப்புகள் நாடு முழுவதும் விற்பனையாகின்றன.

வெறுமனே மசாலா ஆலை மட்டுமின்றி 20 பள்ளிகள் மற்றும் ஒரு மருத்துவமனையையும் இவர் நடத்தி வருகிறார்.

எம்டிஹெச் நிறுவனத்துக்கு துபாய், லண்டனில் அலுவலகங்கள் உள்ளன. 100 நாடுகளுக்கு தயாரிப்புகள் ஏற்றுமதியாகின்றன. நிறுவனத்தின் நிர்வாகத்தை இவரது மகன் கவனித்துக் கொள்கிறார். இவரது 6 மகள்களும் விநியோகப் பிரிவை கவனிக்கின்றனர்.

மசாலா பொடிகள் தயாரிப்புக்கு தேவையான மூலப் பொருள்கள் தரமாகக் கிடைக்க வேண்டும் என்பதால் ஒப்பந்த அடிப்படையில் பொருள்களை சாகுபடி செய்து பயன்படுத்துகின்றனர். கர்நாடகம், ராஜஸ்தான் மாநிலங்களில் இந்நிறு வனத்துக்குத் தேவையான பொருள் களை சாகுபடி செய்து தரும் விவ சாயிகள் உள்ளனர். ஆப்கானிஸ் தான், ஈரானிலிருந்தும் வாசனை திரவியப் பொருள்களை இந்நிறு வனம் கொள்முதல் செய்கிறது.

மசாலா பொடிகள் பிரிவில் எவரெஸ்ட் நிறுவனத் தயாரிப்புகள் 13% சந்தையைப் பிடித்துள்ளன. எம்டிஹெச் வசம் 12% சந்தை உள்ளது. டெகி மிர்ச், சாட் மசாலா, சன்னா மசாலா என 60 வகையான மசாலா பொடிகளை இந்நிறுவனம் தயாரிக் கிறது. இவை ஒவ்வொன்றும் மாதத் துக்கு ஒரு கோடி பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன.

சமையலறை அரசன் என்ற வாசகத்துடன் இந்திய சமையலறை கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கோலோச்சும் எம்டிஹெச் நிறுவனர் தாதாஜி சுவையின் அரசர் என்பதில் சந்தேகமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x