Published : 23 Jan 2017 11:36 AM
Last Updated : 23 Jan 2017 11:36 AM

சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு...

அமெரிக்காவின் கார் உற்பத்தி நிறுவனம் ஜெனரல் மோட டார்ஸ். உலகம் முழுவதும் தொடர்ந்து 77 ஆண்டுகள் கார் விற்பனையில் முதலிடத்தில் இருந்த நிறுவனம். இன்றளவும் ஜிஎம் என்றழைக் கப்படும் ஜெனரல் மோட்டார்ஸ் தயாரிப்புகளுக்கு தனி இடம் உண்டு.

அமெரிக்காவின் டெட்ராய்ட்டில் மிகப் பெரிய ஆலையை வைத்திருந்தாலும் இந்நிறுவனம் 37 நாடுகளில் ஆலைகளை அமைத்து செயல்படுத்தி வருகிறது. இது தவிர சீனா, கொரியா, ரஷியா போன்ற நாடுகளில் உள்ள முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கார்களை தயாரித்து வருகிறது.

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனங் களான ஃபோர்டு, பியட் கிரைஸ்டர், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் சில நிர்வாக வசதிக்காக மெக்சிகோவில் உள்ள ஆலையில் கார்களைத் தயாரித்து அவற்றை அமெரிக்காவில் விற்கின்றன.

கடந்த 20-ம் தேதி அமெரிக்க அதிப ராக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், தனது தேர்தல் பிரசாரத்தின்போது வெளி நாடுகளில் தயாரித்து அமெரிக்காவில் விற்பனை செய்யும் அமெரிக்க நிறு வனங்களை கடுமையாக விமர்சித்தார். தான் அதிபராக பொறுப்பேற்றால் இந்த நிலையைத் தொடர அனுமதிக்க மாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

வெளிநாடுகளில் தயாரித்து அமெரிக் காவில் விற்பனை செய்யப்படும் கார் களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. இதில் அமெரிக்க நிறுவனங்களுக்கு விதி விலக்கு கிடையாது என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் சீனாவின் எஸ்ஏஐசி நிறுவனத் துடன் இணைந்து பேட்டரி மற்றும் கேசோலினில் இயங்கும் ஹைபிரிட் மாடல் கார்களை சீனாவில் அறிமுகப் படுத்தியுள்ளது. எஸ்ஏஐசி-ஜிஎம் தயா ரிப்பாக கெடிலாக் சிடி6 என்ற பெயரில் இரண்டு மாடல் கார்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த கார்கள் இந்த ஆண்டு மத்தி யில் அமெரிக்காவில் அறிமுகம் செய் யப்படும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் அறிமுகமாவதற்கு முன்பாகவே இந்த கார்கள் சீன சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.

அமெரிக்காவில் இந்த கார் மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய ஜிஎம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த காரின் விலை 76,090 டாலராகும்.

சீனாவில் இந்த காரின் விலை முறையே 80,408 டாலர் (ரூ. 54 லட்சம்) மற்றும் 94,683 டாலராகும். (ரூ. 64 லட்சம்) அமெரிக்காவை விட சீனாவில் இந்த கார்களின் விலை அதிகம்.

கெடிலாக் சிடி6 பேட்டரி காரின் பின் சக்கரம் சுழல்வதன் மூலம் டைனமோ செயல்பட்டு மின்சாரம் உற்பத்தியாகும். இது பேட்டரியில் சேமிக்கப்பட்டு கார் இயங்க உதவும். இதில் மிகுந்த செயல் திறன் மிக்க பேட்டரியில் செயல்படும் மோட்டார்கள் காரை இயக்க உதவு கின்றன. மேலும் 2.0 லிட்டர் ஸ்பார்க் இக்னிஷன் இருப்பதால் டர்போ சார்ஜ்டு இன்ஜினை சிறப்பாக செயல்பட உதவு கிறது. இதனால் பேட்டரியில் இயங்கி னாலும் 5.4 விநாடிகளில் இந்த கார் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிடும்.

இதில் 18.4 கிலோவாட் பேட்டரி உள்ளது. மேலும் குளிர்விப்பு தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பேட்டரியின் திறனில் இது 80 கி.மீ.தூரம் ஓடும். கேஸோலினில் சேர்த்து மொத்தம் 935 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம்.

இந்த காரில் மூன்று வித பயண தேர்வுகளை டிரைவர் மேற்கொள்ளலாம். குரூயிஸ் மோட் இது தினசரி பயணத்திற்கானது. இது சவுகரியமான பயணத்தை அளிப்பதோடு எரிபொருள் சிக்கனத்துக்கும் வழிவகுக்கும்.

மலையேற்றம் போன்ற பயணத்துக்கு உதவுவது ஸ்போர்ட் மோட். அதேபோல நீண்ட தூர நெடுஞ்சாலை பயணத்திற்கானது ஹோல்ட் மோட்.

வாகன நெரிசலின்போது வீணாகும் சக்தியை சேமிக்க குரூயிஸ் மோட் உதவும். இது நகர்ப்புற பயணத்துக்கு மிகவும் ஏற்றதாகும்.

சீனாவில் இந்த காரை வாங்குபவர் களுக்கு 220 வோல்ட் சார்ஜர் இலவசமாக வழங்கப்படும் என நிறுவனம் அறிவித் துள்ளது. அதேபோல காரில் உள்ள பேட்டரிக்கு 8 ஆண்டுகளுக்கு உத்தர வாதம் அளித்துள்ளது. இந்த உத்தர வாதம் காரின் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் எலெக்ட்ரானிக் பாகங்களுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது.

சீனாவில் ஏற்கெனவே விற்பனைக்கு வந்துள்ள பிஎம்டபிள்யூ மற்றும் டெஸ்லா நிறுவன பேட்டரி கார்களுக்கு போட்டியாக இது வந்துள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸ் அமெரிக்க நிறுவனமாயிருந்தாலும், தனது விற்பனை வாய்ப்பு எங்கு பிரகாசமாக உள்ளதோ அங்கே புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யத் தயங்கவில்லை. கூடுதல் வரி விதிக்கப்படலாம் என்ற கருத்து நிலவினாலும், சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் எதிர்வரும் காலங்களில் இப்பிரச்சினையை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதே ஆட்டோமொபைல் துறையினரின் எதிர்பார்ப்பாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x