Published : 09 Jun 2018 08:45 AM
Last Updated : 09 Jun 2018 08:45 AM

பென்ட்லி வி 8 எஸ்யுவி அறிமுகம்

சொகுசு கார்களை தயாரிக்கும் இங்கிலாந்தின் பென்ட்லி நிறுவனம் இந்தியச் சந்தையில் தனது வி 8 ரக மாடல் எஸ்யுவி காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ 3.78 கோடியாகும். ஆர்டர் அளிப்பதன் பேரில் இந்த கார் தயாரித்து அளிக்கப்படும்.

பென்டயகா மாடலின் முந்தைய கார்களைப் போலவே இதுவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்ளூசிவ் மோட்டார்ஸ் நிறுவனம் மூலமாக இந்த கார்களை இந்தியாவில் விற்க பென்ட்லி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த காரில் 100 கி.மீ. வேகத்தை 4.5 விநாடிகளில் எட்டிவிடமுடியும். இதில் மணிக்கு 290 கி.மீ. வேகத்தில் செல்லமுடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x