Published : 20 May 2018 08:57 AM
Last Updated : 20 May 2018 08:57 AM

டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் ஹரிஷ் மன்வானி

ஹிந்துஸ்தான் யுனிலீவர் (ஹெச்யுஎல்) நிறுவன இயக்குநர் குழு தலைவர் ஹரிஷ் மன்வானி, டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் இணைந்திருக்கிறார். டாடா சன்ஸ் நிறுவனம் இதனை உறுதிபடுத்தி இருக்கிறது.

டாடா சன்ஸ் குழுமம் ஹரிஷ் மன்வானியை வரவேற்கிறது. இவரது சர்வதேச அளவிலான அனுபவம் டாடா குழுமத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் என டிசிஎஸ் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்திருக்கிறார். பிளாக்ஸ்டோன் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனத்தின் ஆலோசகராகவும் மன்வானி இருக்கிறார். குவால்காம், நீல்சன் ஹோல்டிங்ஸ், வேர்ல்பூல் மற்றும் இந்திய ஸ்கூல் ஆப் பிஸினஸ் ஆகியவற்றிl இயக்குநராக இருக்கிறார்.

64 வயதாகும் மன்வானி தற்போது ஹெச்யுஎல் நிறுவனத்தின் இயக்குநர் குழு தலைவராக இருக்கிறார். வரும் ஜூன் மாதத்தில் ஓய்வு பெற இருக்கிறார். யுனிலிவர் நிறுவனத்தில் பல முக்கியமான பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x