Published : 12 May 2018 08:22 AM
Last Updated : 12 May 2018 08:22 AM

கனரா வங்கி நஷ்டம் ரூ.4,860 கோடி

கனரா வங்கியின் மார்ச் காலாண்டு நஷ்டம் ரூ. 4,859 கோடியாக இருக்கிறது. வாராக்கடனுக்கான ஒதுக்கீட்டு தொகை மூன்று மடங்கு அதிகரித்ததால் நஷ்டமும் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ. 214 கோடி அளவுக்கு லாபம் இருந்தது.

கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை ரூ.2,924 கோடியாக இருந்தது. தற்போது ரூ.8,762 கோடியாக இருக்கிறது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நஷ்டம் ரூ.4,222 கோடியாக இருக்கிறது. 2016-17-ம் நிதி ஆண்டில் ரூ.1,121 கோடி லாபம் ஈட்டியிருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டிலும் ரூ.48,942 கோடியில் இருந்து ரூ.48,194 கோடியாக மொத்த வருமானம் சரிந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x