Published : 08 May 2018 09:55 AM
Last Updated : 08 May 2018 09:55 AM

இண்டோஸ்டார் மே 9-ல் ஐபிஓ வெளியீடு

கார்ப்பரேட் கடன், சிறு மற்றும் நடுத்தர தொழில் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற சேவைகளை அளித்துவரும் இண்டோஸ்டார் கேபிடல் பைனான்ஸ் நிறுவனம், பொதுப் பங்கு (ஐபிஓ) வெளியிடத் திட்டமிட்டுள்ளது. வரும் மே 9 அன்று தொடங்கும் பொதுப் பங்கு வெளியீடு மே 11 அன்று முடிவுக்கு வருகிறது.

ஒரு பங்கின் விலை ரூ.570-ல் இருந்து ரூ.572 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முக மதிப்பின் 57 மடங்கு அடிப்படை விலையாகவும், 57.2 மடங்கு உச்சபட்ச விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 2 கோடி பங்குகளை இந்த நிறுவனம் விற்க இருக்கிறது. குறைந்தபட்சமாக 26 பங்குகளை ஒருவர் வாங்கலாம்.

தர நிர்ணய அமைப்புகள் ‘ஏஏ-’ ரேட்டிங்கை இண்டோஸ்டார் நிறுவனத்துக்கு தொடர்ந்து அளித்துவருவதாக இண்டோஸ்டார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆர். ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x