Published : 08 May 2018 09:49 AM
Last Updated : 08 May 2018 09:49 AM

ஐசிஐசிஐ வங்கி லாபம் 50 சதவீதம் சரிவு

ஐசிஐசிஐ வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 50 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது. வங்கியின் நிகர லாபம் ரூ.1,020 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ.2,024 கோடியாக இருந்தது.

வாராக் கடனுக்கான ஒதுக்கீடு அதிகரித்ததால் வங்கியின் லாபம் பாதியாகக் குறைந்துள்ளது. வங்கியின் வாராக் கடன் அளவு 17 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதால் ஒதுக்கீடும் 85 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.வாராக் கடனுக்கான ஒதுக்கீடு ரூ.6,625 கோடியாகும். டிசம்பர் 2017 காலாண்டில் ஒதுக்கிய தொகை ரூ. 3,570 கோடியாகும்.

இதேபோல டிசம்பர் காலாண்டில் 7.82 சதவீதமாக இருந்த நிகர வாராக் கடன் அளவு தற்போது 8.84 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குள் வங்கியின் நிகர வாராக் கடன் அளவை 1.5 சதவீத அளவுக்குக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வங்கியின் நிகர வாராக் கடன் அளவு தற்போது ரூ.54,063 கோடியாக உள்ளது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2 முக மதிப்பு கொண்ட ஒரு பங்குக்கு ரூ 1.50 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரம் குறித்து இயக்குநர் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. மே 8-ம் தேதி இயக்குநர் கூட்டம் மீண்டும் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x