Published : 20 Apr 2018 08:38 AM
Last Updated : 20 Apr 2018 08:38 AM

இண்டஸ்இந்த் வங்கி நிகர லாபம் ரூ.953 கோடி

தனியார் வங்கியான இண்டஸ்இந்த் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 27 சதவீதம் உயர்ந்து ரூ.953 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.751 கோடியாக நிகர லாபம் இருந்தது. இந்த காலாண்டில் மொத்த வருமானம் ரூ.5,858 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.5,041 கோடியாக இருந்தது.

ஆனால் மார்ச் காலாண்டில் வங்கியின் மொத்த வாராக்கடன் சிறிதளவு உயர்ந்து 1.17 சதவீதமாக இருக்கிறது. நிகர வாராக்கடன் 0.39 சதவீதத்தில் இருந்து 0.93 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 26% உயர்ந்து ரூ.3,605 கோடியாக இருக்கிறது. கடந்த 2016-17-ம் நிதி ஆண்டில் ரூ.2,867 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானமும் ரூ.18,577 கோடியில் இருந்து ரூ.22,030 கோடியாக உயர்ந்தது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் சிறிதளவு சரிந்து 1,832 ரூபாயில் முடிவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x