Published : 22 Mar 2018 09:27 AM
Last Updated : 22 Mar 2018 09:27 AM

12,000 சைபர் குற்றங்கள் 2016-ம் ஆண்டில் பதிவு: மக்களவையில் அமைச்சர் தகவல்

2016-ம் ஆண்டு 12,000-க்கும் மேற்பட்ட சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ் மக்களவையில் தெரிவித்துள்ளார். இது 2014-ம் ஆண்டு 9,622 வழக்குகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் தரவுகளின்படி 2014-ம் ஆண்டு 9,622 வழக்குகளும், 2015-ம் ஆண்டு 11,592 வழக்குகளும் , 2016-ம் ஆண்டு 12,317 வழக்குகளும் சைபர் குற்றத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மின்னணு ஊடகங்களில் குழந்தைகளை பாலியல் ரீதியில் மோசமாக சித்தரிக்கும் குற்றங்களைப் பதிவு செய்யும் 2000-ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டம் 67பி-பிரிவின் படி 2014-ம் ஆண்டு 5 வழக்குகளும், 2015-ம் ஆண்டு 8 வழக்குகளும் , 2016-ம் ஆண்டு 17 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்றப் பதிவு ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து தடுக்கும் 2012-ம் ஆண்டு போக்ஸோ சட்டத்தின் பிரிவு 14 (குழந்தைகளை ஆபாச படங்களில் பயன்படுத்துதல் ) மற்றும் பிரிவு 15 ( குழந்தைகளை உள்ளடக்கிய ஆபாச படங்களை சேமித்தல்) ஆகியவற்றின்கீழ் 2014-ம் ஆண்டு 40 வழக்குகளும், 2015-ம் ஆண்டு 94 வழக்குகளும், 2016-ம் ஆண்டு 48 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2000-ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டம், ஐபிசி சட்டம், பெண்களை தவறாக சித்தரிப்பதைத் தடுக்கும் சட்டம் மற்றும் போக்ஸோ (POCSO) சட்டத்தின் மூலம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் அமைச்சர் அல்ஃபோன்ஸ் குறிப்பிட்டார். -பிடிஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x