Published : 15 Feb 2018 08:41 AM
Last Updated : 15 Feb 2018 08:41 AM

ஆப்பிரிக்க நிறுவனத்தை பட்டியலிட ஏர்டெல் திட்டம்

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஆப்பிரிக்கா பிரிவு நிறுவனமான பெயின் பிவி நிறுவனத்தை பட்டியலிட இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. பெயின் பிவி நிறுவனம் ஆப்பிரிக்க செயல்பாடுகளை கவனித்து வருகிறது. பெயின் பிவி நிறுவனத்தின் இயக்குநர் குழு பிப்ரவரி 12-ம் தேதி கூடி இந்த முடிவை எடுத்தது. நிறுவனத்தை எந்த பங்குச்சந்தையில் பட்டியலிடுவது, இதனை ஏற்று நடத்துவதற்கு நிறுவனங்களை நியமிப்பது குறித்து நிர்வாகக் குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

பேச்சு வார்த்தை தொடங்கி இருப்பது என்பது வழக்கமான நிகழ்வு. ஆனால் பட்டியலிடுவதற்கான காலக்கெடு நிர்ணயம் செய்யப்படவில்லை என அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பெயின் நிறுவனம் 14 ஆப்பிரிக்க நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அங்கு 3ஜி சேவைகள், ஏர்டெல் மணி ஆகிய சேவைகளை அளித்து வருகிறது. 4ஜி சேவையை நான்கு ஆப்பிரிக்க நாடுகளில் அளித்து வருகிறது. டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி 8.41 கோடி வாடிக்கையாளர்கள் ஆப்பிரிக்காவில் இருக்கின்றனர். நிறுவனத்தின் அறிவிப்பு காரணமாக நேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்கு 2.45 சதவீதம் உயர்ந்து 434.80 ரூபாயில் முடிவடைந் திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x