Published : 14 Feb 2018 08:38 AM
Last Updated : 14 Feb 2018 08:38 AM

ஆந்திர அரசுடன் எமிரேட்ஸ் ஒப்பந்தம்

ஆந்திர மாநில அரசுடன் எமிரேட்ஸ் குழுமம், அதன் துணை நிறுவனமான பிளைதுபாய் ஆகியவற்றிக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் குழும தலைவரும், தலைமை நிர்வாகியுமான ஷேக் அகமது பின் சயீத் அல்-மக்தூம் மற்றும் ஆந்திர பிரேதச பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி கிருஷ்ணா கிஷோர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

``இந்த ஒப்பந்தத்தின் மூலம், எமிரேட்ஸ் மற்றும் பிளைதுபாய், ஆந்திரா பொருளாதார மேம்பாட்டு வாரியத்துடன் மிக நெருக்கமாக செயல்பட்டு முதலீட்டு க்கான வாய்ப்புகளை கண்டறிவதுடன், தனது நிபுணத்துத்தைப் பகிர்ந்து கொள்ளும். இதன் மூலம், ஆந்திர பிரதேசத்தின் விமானத் துறை யின் வளர்ச்சிக்கு தேவையான ஆதரவை வழ ங்கும்” என்று ஷேக் அகமது பின் சயீத் அல்-மக்தூம் தெரிவித்தார்.

``இந்த ஒப்பந்தம், ஆந்திர மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பா ட்டை வலுப்படுத்த உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்தி தரும். இந்த கூட்டு ஒப்பந்தம் வாயிலாக இருதரப்பும் மிக உயரிய பலன்களைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை” என்று கிருஷ்ணா கிஷோர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x