Published : 13 Feb 2018 10:05 AM
Last Updated : 13 Feb 2018 10:05 AM

இந்தியன் வங்கி நிகர லாபம் ரூ. 303 கோடி

இந்தியன் வங்கியின் மூன்றாவது காலாண்டு நிகர லாபம் 19% சரிந்து ரூ.303 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.373 கோடியாக நிகர லாபம் இருந்தது. நிதியாண்டின் ஒன்பது மாத காலத்தில் ஒட்டுமொத்த நிகர லாபம் 3.78 சதவீதம் உயர்ந்து ரூ.1,127 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் இது ரூ.1,085 கோடியாக இருந்தது. அதே நேரத்தில் டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் 7.59% உயர்ந்து ரூ. 4,903 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலத்தில் ரூ.4,557 கோடியாக இருந்தது.

நிகர வட்டி வருமானம் 30% அதிகரித்து ரூ.1,622 கோடியாக உள்ளது. வங்கியின் இதர வருமானம் கடந்த ஆண்டைவிட 8.48% குறைந்து 548 கோடியாக உள்ளது. டிசம்பர் காலாண்டில் மொத்த வாராக்கடன் 6.27 சதவீதமாக உள்ளது. அதற்கு முந்தைய காலாண்டில் 6.67 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 7.69 சதவீதமாக இருந்தது. நிகர வாராக்கடனும் 4.76 சதவீதத்தில் இருந்து 3.30 சதவீதமாக குறைந்திருக்கிறது.

வங்கி கடன் அளிக்கும் அளவை ஒற்றை இலக்கத்துக்குள் குறைத்துள்ளது. மூலதனங்கள் மீதான சந்தை மதிப்பு சரிவு, பத்திர வருவாய் குறைவு மற்றும் சந்தை சூழல் காரணமாக நிகர லாபம் சரிந்ததாக வங்கியின் நிர்வாக இயக்குநர் கிஷோர் காரத் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x