Published : 15 Sep 2014 01:14 PM
Last Updated : 15 Sep 2014 01:14 PM

5 ஆண்டுகளில் முதல் முறை: நாட்டின் பணவீக்கம்3.74 சதவீதமாகக் குறைந்தது

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பணவீக்க விகிதம் 3.74 சதவீதமாகக் குறைந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பணவீக்கம் இந்த அளவுக்குக் குறைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் (டபிள்யூ.பி.ஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்க விகிதம் கடந்த ஜூலை மாதம் 5.19 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு (2013) ஆகஸ்ட் மாதம் இது 6.99 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உணவுப் பொருள் விலையைப் பொறுத்தமட்டில் விலைகள் கணிசமாக குறைந்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் 5.13 சதவீதமாகக் குறைந்தது. ஜூலை மாதத்தில் இது 8.43 சதவீதமாக இருந்தது. 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பணவீக்கம் 1.8 சதவீதமாக இருந்தது. காய்கறிகளின் விலை தொடர்ந்து மூன்றாவது மாதமாகக் குறைந்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் இது 4.88 சதவீதமாக இருந்தது.

வெங்காயத்தின் விலையும் குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் இது 44.7 சதவீதமாக குறைந்தது. இருப்பினும் உருளைக் கிழங்கின் விலை 61.61 சதவீதமாக உயர்ந் திருந்தது. –பி.டி.ஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x