Last Updated : 04 Sep, 2016 11:24 AM

 

Published : 04 Sep 2016 11:24 AM
Last Updated : 04 Sep 2016 11:24 AM

250 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது ஓலா

`டாக்சி ஃபார் ஷியூர்’ எனும் துணை நிறுவனத்தை மூடி 700 பேருக்கு வேலை இழப்பை ஏற்படுத்திய ஓலா நிறுவனம் ஒரு வார காலத் திற்குள் தனது நிறுவனத்தில் 250 பேரை வீட்டுக்கு அனுப்பியுள்ளது.

சரிவர பணியாற்றவில்லை, ஒழுங்கு நடவடிக்கை என்பன உள்ளிட்ட பல காரணங்களுக்காக இவர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டதாக நிறுவனம் தெரிவித் துள்ளது.

சர்வதேச நிறுவனமான உபெரை சமாளிக்கும் நோக்கத் தில் இத்தகைய நடவடிக்கையை ஓலா எடுத்திருப்பதாக இத்துறை யினர் தெரிவிக்கின்றனர்.

ஆண்டுதோறும் நிறுவனத்தி லிருந்து வெளியேறுவோர் எண் ணிக்கை 3 சதவீதம் முதல் 4 சத வீதம் வரை உள்ளது. அத்துடன் சரியாக செயல்படாதவர்களை வைத்துக் கொண்டிருப்பதை விட சிறப்பாக செயல்படுவதற்கு இத் தகைய நடவடிக்கை அவசிய மாகிறது என்று ஓலா நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித் துள்ளார்.

நிறுவனத்தில் 300 பணியிடங் கள் காலியாக உள்ளன. திறமை யானவர்களை பணியமர்த்தும் வேலைகள் நடந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். 102 நகரங்களில் மொத்த பணியாளர் களின் எண்ணிக்கையை 6 ஆயி ரமாக உயர்த்த முடிவு செய்துள்ள தாக ஓலா நிறுவனம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

18 மாதங்களுக்கு முன்பு டாக்சி ஃபார் ஷியூர் நிறுவனத்தை 20 கோடி டாலருக்கு ஓலா வாங்கியது. கடந்த வாரம் இந்நிறுவனத்தை மூடுவதாக அறிவித்தது. இதனால் இதில் பணிபுரிந்த 700 பேர் வேலையிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x