Last Updated : 30 Oct, 2015 09:49 AM

 

Published : 30 Oct 2015 09:49 AM
Last Updated : 30 Oct 2015 09:49 AM

வணிக நூலகம்: கேள்வியோடு தொடங்குங்கள்

வணிகம் மற்றும் தலைமைப் பண்புகளை பற்றி ஏராளமான புத்தகங்கள், தாராளமான கருத்துகளோடு எண்ணிலடங்கா ஆசிரியர்களால் இன்றும் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. ஒரு மதிப்புமிக்க இலக்கை நோக்கி செல்வதாக தோன்றினாலும் இதில் சில குறைபாடுகளும் உண்டு. பெரு வாரியான வணிக நிறுவனங்களும் தலைவர்களும் அவர்களுடைய பின் புலத்தில் எவ்வாறு அந்த வெற்றிகளை வாரிக் குவித்தார்கள் என்பதைப் பற்றி குறிப்பிடத் தவறிவிடுகின்றன. அதிக எண்ணிக்கையிலான புத்தகங்கள் அடிப்படை தகவல்களை தரத் தவறுவதுடன் எழுதும் பாணியிலும் வளைவுகளும், குழப்பங்களும் நிறைந் ததாக உள்ளன.

ஆனால், SIMON SINEK என்ற நூலாசிரியர் எழுதிய தலைவர்கள் எவ்வாறு மற்றவர்களை ஊக்கு வித்து எண்ண எழுச்சிகளை இலக்கு களை நோக்கி சரியான முறையில் நகர்த்துவது என்பதை பற்றி விரிவாக விளக்கியுள்ளார். நூலாசிரியர் கூறிய கருத்துகள் எளிமையாகவும் சுருக்க மாகவும் இருந்தாலும், பல நேரங்களில் பல புத்தகங்களில் படித்த கருத்துகளை நினைவூட்டுவதாக இருக்கலாம். ஆனால் நூலாசிரியர் எழுதியுள்ள பாங்கு படித்தவுடன் தாக்கத்தை ஏற்படுத்துவதில் தனித்து நிற்கிறது.

இந்த நூலின் அடித்தளம் மூன்றே மூன்று செய்திகளில் அடங்கி உள்ளது. ஏன், எப்படி, எதற்காக இதை ஒரு வட்டமாக எடுத்துக் கொண்டு ஏன் என்ற கேள்வியோடு ஆரம்பித்து, எப்படி என்ற துணையோடு எதற்காக என்ற வட்டத்தில் முடிகிறது.

ஏன் என்பது தான் முக்கியமான கேள்வி. ஏன் என்ற உள் வட்டத்திற்கு எப்படி என்ற வெளி வட்டமும், எதற்காக என்ற அதனின் வெளி வட்டமும் உள்ளது. சுருங்க கூறின் ஏன் என்ற கேள்விக்கு விடைகிடைத்தால் எப்படி எதற்காக என்ற கேள்விக்கான விடைகள் புலப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

நூலாசிரியர் குறிப்பிடுவதைப் போல ஏன் என்ற கேள்வி கேட்கும் நிறுவனங்கள் வெற்றியையும், அந்த கேள்விக்கு விடை இல்லாத நிறுவ னங்கள் தோல்வியையும் தழுவுகின்றன.

பெரும்பான்மையான மக்கள் தங்களுடைய எண்ண ஓட்டங்களும் நிறுவனங்களின் தொலைநோக்கு பார்வையும், பொருட்களின் விவரிப்பும் ஒன்றாகும் வகையில் இருந்தால் நிச்சயம் அதை விரும்புவார்கள். எல்லோரும் ஒரு நிறுவனத்தின் நோக் கங்களோடு இணைந்து போக வாய்ப் பில்லை. எல்லோரையும் ஈர்த்து பெரும் பொருள் சேர்ப்பதும் சாத்திய மில்லை. எண்ணங்களும், செயல்களும் ஒன்றுக்கொன்று மாறுபடாமல் இருந் தால் மற்றவர்கள் அந்த இரண்டின் பிணைப்பையும் பார்க்கும் பொழுது அதனால் ஈர்க்கப்படுகிறார்கள்.

ஆப்பிள் நிறுவனம் கணினிகளை தயாரித்தது. மடிக்கணினியை காட் டிலும் அதிக விலையுள்ளதாகவும், குறைவான அளவில் மென்பொருள்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் வேகம் இல்லாமலும், போட்டியில் பின் தங்கியும் இருந்தது.

ஆனால் அதிக எண்ணிக்கையில் ஆப்பிள் பொருட்களை வாங்கியவர்கள் ஏன் இந்த பொருளை வாங்கவேண்டும் என்ற ஆப்பிள் குழுமங்களின் விளக் கங்களை வெகுவாரியாக ஒத்து போக கூடியவர்களாக இருந்தார்கள். ஆப்பிள் நிறுவனம் சந்தை படுத்தும் உத்திகளில் அவர்களுடைய பொருட்கள் புரட்சி கரமானதாகவும், தனிநபருக்காக வடிவமைக்கப்பட்டதாகவும், தனித் துவமிக்கதாகவும் இருப்பதாக விளம் பரப்படுத்தியது.

தங்களுடைய மதிப்பீடுகளும், நிறுவனத்தின் செயல்பாடுகளும் பொருட்கள் பற்றிய விவரங்களும் ஒரே புள்ளியில் இழையோடியதால் பொருட்களை வாங்கிக் குவித்தார்கள். இந்த பொருட்கள் மிக சிறந்த பொருட்களாக இல்லாவிடினும், சந்தையில் முதல் முதலில் சந்தைப் படுத்த பட்ட பொருளாக இருந்த போதிலும் தலைசிறந்த முதலிடத்தை பெறுவதில் அதிக காலம் எடுத்துக் கொள்ளவில்லை.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 1960 களில் அமைதிக்கும் அன்புக்கும் வெளிப்பாடாக தங்களுடைய வேன் களை உற்பத்தி செய்து வந்தார்கள். பீட்டில் ( BEETLE) என்ற உலகில் அதிக விற்பனையான காருக்கு இருக்கை களுக்கு முன்பாக மலர் கொத்துக்களை வைப்பது போன்ற அமைப்பினை ஏற்படுத்தி இருந்தார்கள். அன்பிற்கும், அமைதிக்கும் எடுத்துக்காட்டாகவும் ஏன் என்ற கேள்விக்கு விடையாகவும் அது அமைந்தது. அதன் பிறகு வெளிவந்த அதி நவீன வசதிகள் பொருந்திய பயிடான் (PHAETON) என்ற கார் தொழில் நுட்பத்திலும், பொறியியலிலும் உன்னதமான படைப்பாகும்.

ஆனால், மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது. ஏன் என்ற நிறுவனத்தின் உத்திகளுக்கும் (அன்பு, அமைதி) புதிய காருக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. மக்களிடம் ஏன் என்ற கேள்விக்கும் அவர்களின் சொந்த எண்ணங்களின் வெளிப்பாடுகளுக்கும் இருந்த தொடர்பு PHAETON காரில் இல்லை. அதனால் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஏன் என்ற கேள்வி வணிகத்திலும் வியாபாரத் திலும், பணியாளர்களிடம் மட்டும் மாற்றங்களையும், ஏற்றங்களையும் தருவதில்லை மாறாக தலைவர் களுக்கும், தலைமை பண்மை கூர் தீட்டுவதற்கும் தொலை நோக்கு பார்வையும், ஏன் என்ற கேள்வியும் இணைந்தே இருக்கின்றன.

மார்டின் லூதர் கிங் என்ற அமெரிக்க தலைவர் நான் திட்டங்கள் வைத்திருக்கின்றேன், என் திட்டங்களை கேளுங்கள், புதிய உத்திகளை கொண்டு புதிய உலகம் படைப்போம் என்றெல்லாம் கூட்டத்தில் முழங்கவில்லை. மாறாக எனக்குள் ஒரு கனவு இருக்கின்றது என்று மக்களின் எண்ண ஓட்டங்களை ‘ஏன்’ என்ற கேள்வியின் மூலம் ஒருங்கிணைத்து மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தினார். ஏன் என்ற கேள்வி இல்லாமல் சிவில் உரிமை இயக்கம் வெற்றி கண்டிருக்க முடியாது.

நூலாசிரியர் ஏன் என்ற கேள்வி கேட்க சொல்லியதால் ஆப்பிள் நிறுவனம் வெற்றியடையவில்லை. மாறாக வெற்றி பெற்ற நிறுவனங்களை ஆய்வு செய்யும் பொழுது அந்த வெற்றி பெற்ற நிகழ்வுகளுக்கு காரணிகளாக ஏன், எப்படி, எதற்காக என்ற உள் வட்டமும் வெளி வட்டமும் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றது என்பதை மிக விரிவாக, தெளிவாக, எளிமையாக இந்த புத்தகம் கூறுகிறது. ஏன் இந்த புத்தகத்தை நான் படிக்க கூடாது என்ற கேள்வி நிச்சயம் உங்களை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும்.

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x