Last Updated : 19 Jun, 2015 10:17 AM

 

Published : 19 Jun 2015 10:17 AM
Last Updated : 19 Jun 2015 10:17 AM

மாற்று எரிசக்தியின் காலம் மலருமா?

கச்சா எண்ணெய் விலை எவ்வளவுதான் குறைந் தாலும் பெட்ரோல், டீசல் விலை பெருமளவு குறைவ தில்லை. விலை குறைவு காசு களிலும், உயர்வு ரூபாயிலும் இருக்கிறது. ஒரு காலத்தில் இது கச்சா எண்ணெய் வற்றிப் போகும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. இதனாலேயே மாற்று எரிசக்தியை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

சுற்றுச் சூழலை பாதிக்கும் ஆட்டோமொபைல் துறையில் மாற்று எரிசக்திக்கான சிந்தனை தீவிரமடைந்து வருகிறது. இதன் வெளிப்பாடாக பேட்டரியில் இயங்கும் மோட்டார் சைக்கிள், கார்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேட்டரி கார்கள் இப்போதைக்கு சிறு அளவில் பெரிய ஆலைகளின் வளாகங்கள், சுற்றுலா மையங் களில் பயன்படுத்தப்படுகின்றன.

மோட்டார் சைக்கிளைப் பொருத்த -மட்டில் இதற்கான வரவேற்பு பெருமளவில் இல்லை என்றாலும். இந்த முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருக் கிறது.

2 சக்கர வாகனத்தை வெளியே எடுக்க வேண்டு மென்றால், குறைந்தது ரூ.100 தேவைப்படுகிறது. உணவுத் தேவைக்காக உழைப்பதை காட்டிலும், பெட்ரோல் டீசல் தேவைக்காக அதிகம் உழைக்க வேண்டியுள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் மாதத்துக்கு ரூ3 ஆயிரம்.

இதுவே வருடத்துக்கு என்றால் ரூ.36 ஆயிரம். ஒரு ஆண்டுக்கு பெட்ரோல், டீசலுக்கு ஆகும் செலவுடன் இன்னும் கொஞ்சம் கணிசமான தொகையை போட்டால் இன்னுமொரு வண்டியை வாங்கி விடலாம். அந்த அளவுக்கு பெட்ரோலுக்கும் டீசலுக்கும் விலை கொடுத்து கொண்டிருக்கிறோம்.

இந்த சூழலில் மாற்று எரிசக்திக்கான வேட்கை மக்கள் மனதில் எழுந்துள்ளது. இதனை நிறுவனங்களும் மெல்ல மெல்ல புரிந்து கொள்ள ஆரம்பித் துள்ளன. சூரிய எரிசக்தி, மின்சார எரிசக்தி என இரண்டு ஆற்றல்களாளும் இயங்கக்கூடிய வண்டிகள், அல்லது தனித்தனியே சூரிய மற்றும் மின் சக்தியால் இயங்கக்கூடிய வண்டிகள் என நிறைய முயற்சிகள் தொடர் கின்றன. இதில் நிறுவனங்களை காட்டிலும், ஆராய்ச்சி மாணவர் களின் பங்களிப்பு பெரியளவில் உள்ளது. ஆனால் அவை அனைத்தும் கல்லூரி புராஜெக்ட் என்பதால் கல்லூரி வளாகத்தோடு முடிந்துவிடுகிறது.

பெட்ரோல், டீசல் பயன் படுத்துவதால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. தலைநகர் டெல்லியில் இது அதிகமாக இருப்பதாக சுட்டிக்காட்டிய பசுமை தீர்ப் பாயம், உடல்நலம் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் டெல்லியை விட்டே வெளியேறி விடலாம் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.

இந்த சூழலில் தான் இ-ஸ்கூட்டர்ஸின் வருகைக்கான அறிகுறிகள் கடந்த 2 ஆண்டுகளில் கொஞ்சம் தென்படுகின்றன.

‘ஹீரோ போட்டான்’ என்னும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹீரோ நிறுவனம் கடந்தாண்டு அறிமுகப் படுத்தியது.

இதற்கு முன்பும் அந்த நிறுவனம் பத்துக்கும் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஹீரோ போட்டான் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத் தப்பட்டது.

இதற்கு மிகச் சிறந்த அளவில் வரவேற்பு உள்ளது. இதற்கு முன்பே நிறைய சூரிய ஆற்றல் மற்றும் பேட்டரி இணைந்த ஹைப்ரிட் ஸ்கூட் டர்களை ஹீரோ எலெக்ட்ரிக் அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் இந்த ஸ்கூட்டர்களுக்கான விற்பனை மையம் உள்ளது. தமிழகத்தில் இ-ஸ்கூட்டர் களுக்கான வரவேற்பு எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ள தமிழகத்தில் ஹீரோ எலெக்ட்ரிக் இ-ஸ்கூட்டர்களை விற்பனை செய்துவரும் மணி & மணி விற்பனை மையத்தின் மேலாளர் மாரிமுத்துவிடம் பேசினோம்,

“ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் மொத்தம் 12 மாடல்களில் இ-ஸ்கூட்டர்களை தயாரித் துள்ளது. இதில் மேக்சி, க்ருஸ், ஆப்டிமா உள்ளிட்ட 7 ஸ்கூட்டர்கள், மித வேக திறன் கொண்டவை மணிக்கு 25 கி.மீ வேகம் வரை பயணிக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 70 கி.மீ வரை பயணிக்கலாம்.

இதுவே, ஃபோட்டான், சியான் உள்ளிட்ட 5 வண்டிகள் மணிக்கு 50 கி.மீ வேகம் செல்லும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கிமீ வரை செல்லலாம். இவற்றை முழுதாக சார்ஜ் செய்ய 6 மணி நேரம் தேவைப்படுகிறது. இந்த வண்டிகளின் பேட்டரி 22 ஆயிரம் கி.மீ ஓட்டிய பிறகு மாற்றினால் போதும். ஆனால் பெட்ரோல் வண்டிகளில் 17 ஆயிரம் கி.மீ வரை தாக்குப்பிடிப்பதே பெரிய விஷயம் பராமரிப்பு செலவும், பெரியளவில் கிடையாது. முக்கியமாக சத்தம், புகை இரண்டுமே இல்லை என்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

ரூ.38 ஆயிரம் முதல் ரூ.58 ஆயிரம் வரை இந்த வண்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது எலெக்ட்ரிக் வண்டிகளுக்கு மத்திய அரசு ரூ. 7 ஆயிரத்து 500 மானியம் அளித்துள்ளதால், நாங்கள் அதன் விலையை ரூ.8 ஆயிரம் அளவு குறைத்து விற்கிறோம். இதனை சர்வீஸ் செய்வதற்கான வசதிகளும் எங்களிடம் உள்ளன” என்றார்.

இதுமட்டுமன்றி சமீபத்தில் இடிஐ டயனமிக் இ-ஸ்கூட்டர்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.

அந்த நிறுவனத்தை போலவே, ஹோண்டா மோட்டார்ஸும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது.

இதில் உச்சகட்டமாக அமெரிக் காவை சேர்ந்த முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனமான டைகர் குளோபல் 12 மில்லியன் டாலர் முதலீட்டுடன் பெங்களூருவில் காலடி வைத்துள்ளது. அந்த ஆலையிலிருந்து ஆதர் எஸ்340 எனப்படும் ஸ்கூட்டர் விரை விலேயே சந்தைக்கு வரவுள்ளது.

இப்படி முன்னணி நிறுவ னங்கள் மட்டுமன்றி கோ கிரீன் உள்ளிட்டவை எலெக்ட்ரிக் கார்களை சந்தைப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக இயங்கி வருகின்றன. எனவே, வருங்காலம் மாற்று சக்தியால் இயங்கும் என்று நம்புவோமாக.

manikandan.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x