Published : 02 Apr 2015 11:00 AM
Last Updated : 02 Apr 2015 11:00 AM

மாருதி, ஹூண்டாய் கார் விற்பனை சரிவு

கடந்த மார்ச் மாதத்தில் பெரும் பாலான நிறுவனங்களின் கார் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது. அதிக எண்ணிக்கையில் கார்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களான மாருதி, ஹூண்டாய் ஆகியவற்றின் விற் பனையும் சரிவைச் சந்தித்துள்ளது.

மாருதி சுஸுகி

மாருதி நிறுவனத்தின் கார் விற்பனை மார்ச் மாதத்தில் 1.6 சதவீதம் சரிந்தது. கடந்த மாதத்தில் இந்நிறுவனம் 1,11,555 கார்களை விற்பனை செய்திருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 1,13,350 கார்களை விற்பனை செய்திருந்தது.

உள்நாட்டில் இந்நிறுவன கார் விற்பனை 1.4 சதவீதம் உயர்ந்திருந்தது. மொத்தம் 1,03,719 கார்கள் விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் விற்பனையான கார்களின் எண்ணிக்கை 1,02,269.

2014-15-ம் நிதி ஆண்டில் இந்நிறுவனம் மொத்தம் 12,92,415 கார்களை விற்பனை செய்திருந்தது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 12 சதவீதம் அதிகமாகும். உள்நாட்டில் இந்நிறுவனம் மொத்தம் 12,71,005 கார்களை விற்பனை செய் திருந்தது.

ஹூண்டாய்

இந்த நிறுவனத்தின் கார் விற்பனை மார்ச் மாதத்தில் 3.8 சதவீதம் சரிந்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 49,740 கார்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 51,708 கார்களை விற்பனை செய்திருந்தது.

உள்நாட்டில் இந்நிறுவனம் 39,525 கார்களை விற்பனை செய்துள்ளது. நிறுவனத்தின் ஏற்றுமதி 39 சதவீதம் சரிந்து 10,215 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு இந்நிறுவனம் 16,705 கார்களை ஏற்றுமதி செய்திருந்தது.

2014-15-ம் நிதி ஆண்டில் இந்நிறுவன வாகன விற்பனை 4,20,668 ஆகும். முந்தைய நிதி ஆண்டில் (2013-14) விற்பனை 3,80,253 ஆக இருந்தது.

ஜெனரல் மோட்டார்ஸ்

இந்நிறுவன கார் விற்பனை 35 சதவீதம் சரிந்தது. மார்ச் மாத விற்பனை 4,257 ஆக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 6,601 கார்களை விற்பனை செய்திருந்தது.

ரெபோ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட போதிலும் அதன் பயன் வாடிக்கையாளர்களைச் சென்றடையவில்லை. இதுவும் வாகன விற்பனை சரிவுக்கு முக்கியக் காரணம் என்று நிறுவனத்தின் துணைத் தலைவர் பி. பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.

மஹிந்திரா

மஹிந்திரா நிறுவன கார் விற்பனை கடந்த மார்ச் மாதத்தில் 12.44 சதவீதம் சரிந்தது. மார்ச் மாதத்தில் இந்நிறுவனம் விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கை 45,212 ஆகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 51,636 கார்களை விற்பனை செய்திருந்தது.

உள்நாட்டில் இந்நிறுவன விற்பனை 15 சதவீதம் சரிந்ததில் மொத்தம் 41,193 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறு வனம் உள்நாட்டில் 48,490 வாகனங் களை விற்பனை செய்திருந்தது.

இந்நிறுவனத்தின் ஏற்றுமதி 28 சதவீதம் அதிகரித்து 4,019 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் 3,146 கார்களை ஏற்றுமதி செய்திருந்தது.

ஹீரோ மோட்டோகார்ப்

இருசக்கர வாகன உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கடந்த நிதி ஆண்டு விற்பனை 6.2 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 66,31,826 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 2013-14-ம் நிதி ஆண்டில் இந்நிறுவன வாகன விற்பனை 62,45,960 ஆக இருந்தது.

கடந்த மார்ச் மாதத்தில் இந்நிறுவன வாகன விற்பனை 1.47 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 5,31,750 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வாகன விற்பனை 5,24,028 ஆக இருந்தது.

ராயல் என்பீல்டு

இருசக்கர வாகன உற்பத்தியில் பிரபலமாக விளங்கும் எய்ஷர் மோட்டார்ஸின் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் விற்பனை மார்ச் மாதத்தில் 42 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 33,679 வாகனங்களை விற்பனை செய்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவன வாகன விற்பனை 23,693 ஆக இருந்தது.

உள்நாட்டில் 32,854 வாகனங் களை விற்பனை செய்துள்ளது. 825 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

ஹோண்டா

இந்நிறுவன இரு சக்கர வாகன விற்பனை 1.8 சதவீதம் அதிகரித் துள்ளது. மொத்தம் 3,99,178 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவன வாகன விற்பனை 3,92,060 ஆக இருந்தது. இந்நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை 18 சதவீதம் சரிந்ததில் மொத்தம் 1,45,508 வாகனங்களே விற்பனையானது. முந்தைய ஆண்டு 1,78,035 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

ஏற்றுமதி 17 சதவீதம் சரிந்தது. மொத்தம் 14,751 வாகனங்களை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x