Published : 15 May 2015 10:25 AM
Last Updated : 15 May 2015 10:25 AM

‘மக்களின் கார்’: ‘நானோ’-வின் புதிய அவதாரம்

நானோ என்றாலே அது டாடா நானோ காரைத்தான் குறிக்கும் என்ற அளவில் பிரபலமானவை நானோ கார்கள்.

குறைந்த விலையில் டாடா குழுமத்திலிருந்து வெளி வருகிறது என்பதாலேயே இது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது.

ஆனால் ஆரம்பத்திலிருந்தே இந்த கார் உருவாக்கம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டது. ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்ற மேற்கு வங்கத்தில் இந்த ஆலை அமைக்க டாடா முடிவு செய்தார். ஆனால் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஆலை அமைக்க விவசாயிகளிடமிருந்து பெற்ற நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற போராட்டம் வலுப்பெற்றது. இதையடுத்து டாடா நிறுவனம் பிறகு அங்கிருந்து தனது உற்பத்தி ஆலையை குஜராத்துக்கு மாற்றியது. அங்கிருந்து கார்கள் தயாராகி 2009-ல் வெளிவந்தது. குறைந்த விலை கார் என்ற பெயரில் நானோ அறிமுகமானது.

ஆரம்பத்தில் நானோ காரை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவியது. ரூ. 1 லட்சத்துக்கு காரை அளிக்க வேண்டும் என்ற ரத்தன் டாடாவின் இலக்கு நிறுவனம் தொடங்கி செயல்பட ஆரம்பித்தபோது சாத்தியமா காமல் போனது. இதற்கு அதிகரித்த விலைவாசியும் ஒரு காரணம்.

இருப்பினும் ஒரு லட்சம் பேருக்கு ரூ. 1 லட்சம் விலையில் காரை வழங்க நிறுவனம் முன் பதிவுகளை ஏற்று அதை செயல்படுத்தியது.

கார்கள் சாலைகளில் ஓடத் தொடங்கியபிறகு, இதன் மீதிருந்த எதிர்பார்ப்பு கடுமையாக சரிந்தது. முன்னதாக கார்களை பதிவு செய்து வாங்கியவர்கள், இதை ஏன் வாங்கினோம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் நானோ காரை தங்கள் நண்பர்களோ, உறவினர்களோ வாங்க பரிந்துரைக்கவில்லை. விற்பனை அதிகரிக்காததற்கு இதுதான் பிரதான காரணமாகும்.

மேலும் ஆரம்பத்தில் மலிவு விலை கார் என்ற விளம்பரத்துடன் வந்ததால் இதை பலரும் விரும்ப வில்லை என்ற உண்மை அடுத்த கட்ட ஆய்வில் தெரிய வந்தது.

2012-ல் அறிமுகம் செய்த நானோ ட்விஸ்ட்டும் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாக வில்லை. ஆண்டுக்காண்டு நானோ கார்களின் விற்பனை சரிந்து வந்ததால் இந்தக் கார் உற்பத்தியை நிறுத்தி விடலாமா என்றும் டாடா குழுமம் சிந்தித்தது.

இந்நிலையில் நிறுவனத்தின் விற்பனையை பாதிக்கும் நானோவைக் கைவிட முடிவு செய்யவில்லை. மாறாக இதற்கு புத்துயிர் அளிக்க முடிவு செய்துள் ளதாக நிறுவனத்தின் துணைத் தலைவர் கிரிஷ் வாஹ் தெரிவித்துள்ளார்.

நானோ மீது மக்கள் மத்தியில் உணர்வு பூர்வமான பற்று உள்ளது. இதேபோல இதை வெற்றிகரமான பிராண்டாக உருவாக்குவதிலும் பல தடைகள் உருவாகியுள்ளன. அதை தகர்த் தெறியும் பணிகளை இப்போது செய்து வருவதாக கிரிஷ் குறிப்பிட்டுள்ளார்.

மலிவு விலை கார் என்ற பெயரை மாற்றி இது முழுமை யான ஹாட்ச் பேக் காராக மக்கள் மத்தியில் இடம் பெறச் செய்து இதை மக்களின் காராக மாற்றுவதுதான் நோக்கம் என் கிறார்.

ஆனால் `மலிவு விலை கார்’ என்ற பெயரை நீக்கி `மக்களின் கார்’ என்ற பெயரில் அடுத்த தலைமுறை `ஜென் எக்ஸ் நானோ’ கார்களை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆட்டோமேடிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் எனப்படும் எளிதான கியர் மாற்றும் தன்மை, ஓபன் பூட் (பின் பக்கம் திறக்கும் வசதி) புளூடூத் ஃபோன் சிங்க் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட பல வசதிகள் இதில் உள்ளன.

அடுத்த தலைமுறை கார்கள் அடுத்த 6 வாரங்களில் விற்ப னைக்கு வர உள்ளன. இதைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் முந்தைய மாடல்கள் அனைத்தும் படிப்படியாக விலக்கிக் கொள்ளப் படும். முந்தைய மாடல்களில் சிஎன்ஜி-யில் இயங்கும் நானோ கார்கள் உற்பத்தியை மட்டும் தொடர்வதென நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நகர போக்குவரத்துக்கேற்ப ஆட்டோ கியர் டிரான்ஸ்மிஷன் வசதி, பவர் ஸ்டியரிங், பின்புறம் திறந்து மூடும் வசதி, பெரிய அளவு பெட்ரோல் டாங்க் (24 லிட்டர் கொள்ளளவு) ஆகிய வற்றுடன் அடுத்த தலைமுறை நானோ வடிவமைக்கப்பட் டுள்ளது.

ஒரு லட்சம் ரூபாய்க்கு அறிமுகமான நானோ கார்களின் இப்போதைய விலை ரூ.2.04 லட்சம் முதல் ரூ. 2.52 லட்சம் வரையாக இருக்கிறது. இனி மேலும் இது குறைந்தவிலை கார் என்ற பெயரில் பவனி வர முடியாது. மாறாக மக்களின் கார் என்ற பெயரில் சீறிப் பாயுமா என்பதை அதன் செயல்பாடுகள்தான் உணர்த்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x