Published : 05 Jun 2015 10:33 AM
Last Updated : 05 Jun 2015 10:33 AM

பிஎம்டபிள்யு ஐ-8 பிரம்மாண்ட அழகு - நடிகை நிக்கி கல்ராணி

கியர் இல்லாத பைக்கை 8-ஆம் வகுப்பு படிக்கும்போதே ஓட்டக் கற்றுக்கொண்டேன். கியர் வைத்த பைக் 10-ஆம் வகுப்பு படிக்கும்போது ஓட்டத் தொடங்கினேன். டிரைவிங் என்றால் அவ்வளவு பிடிக்கும். தமிழில் அடுத்து வெளிவரவிருக்கும் ‘யாகாவராயினும் நாகாக்க’ படம் முழுவதும் பைக் ஓட்டுவது மாதிரிதான் காட்சிகள் அமைந்துள்ளன.

பெங்களூரு கல்லூரியில் படித்த நாட்களில்தான் கார் டிரைவிங் கற்றுக்கொண்டேன். வீட்டில் 5 கார்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கார் ஓட்டிச் செல்லப் பிடிக்கும். இணையத்தில் புகைப்படம் வெளியிட்ட நாளிலிருந்து ‘அடுத்து இந்தக் கார்தான்’ என்று வாங்க திட்டமிட்டிருக்கும் கார் பிஎம்டபிள்யு ஐ 8 ஸ்போர்ட்ஸ் கார். அப்படி ஒரு பிரம்மாண்ட அழகு.

கருப்பு நிறம் ரொம்பவே பிடிக்கும் என்றாலும் எங்கள் வீட்டில் உள்ள கார்கள் அனைத்தும் வெள்ளை நிறம் என்பதால், இந்தக் காரையும் வெள்ளை நிறத்தில்தான் தேர்வு செய்யப்போகிறேன்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x