Last Updated : 01 Jun, 2016 10:48 AM

 

Published : 01 Jun 2016 10:48 AM
Last Updated : 01 Jun 2016 10:48 AM

பிஎப் கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுத்தால் டிடிஎஸ் கிடையாது

ஐந்து ஆண்டுகளுக்கு உட்பட்ட வருங்கால வைப்பு நிதி (பிஎப்) தொகையை பணியாளர்கள் திரும்ப பெறும் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு உட்பட்ட பிஎப் கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரம் வரையிலான வைப்பு நிதி தொகையைத் திரும்ப பெற டிடிஎஸ் செலுத்த தேவையில்லை. இந்த நடைமுறை இன்று (ஜூன் 1) முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

ஏற்கெனவே இருந்த விதிமுறை யில் பிஎப் கணக்கிலிருந்து வெளியே எடுக்கும் பணம் ரூ.30 ஆயிரம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இந்த அளவு தற்போது ரூ.50 ஆயிரம் என அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிபிஎப் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதிச்சட்டம் 2016 பிரிவு 192A ன் படி, பிஎப் கணக்கிலிருந்து வெளியே எடுக்கும் பணம் ரூ.30 ஆயிரம் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்ற விதி இதுவரை நடைமுறையில் இருந்தது. இந்த வரம்பு தற்போது ரூ.50 ஆயிரம் என உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று (2016 ஜூன் 01) முதல் நடைமுறைக்கு வருகிறது.

பிபிஎப் கணக்கின் முதிர்வு காலத்துக்கு முன்னரே தேவை யில்லாமல் கணக்கை முடித்து அதிலிருந்து பணத்தை எடுப்ப தால், டிடிஎஸ் பிடித்தம் செய் வது அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நீண்ட கால சேமிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் பான் கார்டு எண் சமர்பித்தால் 10 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். பான் எண் இல்லையென்றால் கணக்கிலிருந்து எடுக்கப்படும் தொகைக்கு 34.608 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.

பிஎப் சந்தாதாரர்கள் படிவம் 15 ஜி, அல்லது 15 ஹெச் சமர்பித்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது.

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 15 ஜி படிவமும், 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 15 ஹெச் படிவமும் சமர்பிக்க வேண்டும். சந்தாதாரர்கள் பான் எண் சமர்பிக்கவில்லை என்றால் கணக்கிலிருந்து எடுக்கப்படும் தொகைக்கு அதிகபட்சம் 34.60% சதவீதம் வரை டிடிஎஸ் பிடித்தம் செய்ய வாய்ப்புள்ளது.

அதேசமயத்தில் பணியிடம் மாறும்போது பிஎஃப் சந்தாதாரர் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு பணத்தை மாற்றும் போது டிடிஎஸ் பிடித்தம் இருக் காது. மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பணத்தை திரும்ப எடுக்கிறபோதும் டிடிஎஸ் பிடித்தம் இருக்காது என்று வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் குறிப்புகள் தெரிவிக்கின் றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x