Published : 19 Feb 2015 11:21 AM
Last Updated : 19 Feb 2015 11:21 AM

நகரங்களில் பயன்படுத்தாத வீட்டு உபயோகப் பொருள்களின் மதிப்பு ரூ.56,200 கோடி

நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் உபயோகப்படுத்தப்படாத பொருள்களின் மதிப்பு ரூ. 56,200 கோடி என்று ஒஎல்எக்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஓஎல்எக்ஸ் கிரஸ்ட் 16 நகரங்களில் ஆய்வு நடத்தியது. இதில் ஐந்தில் ஒரு பங்கு பொருள்கள் வீடுகளில் பயன் படுத்தப்படாமல் முடக்கி வைக்கப் பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த பொருள்கள் பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படாமல் வெறுமனே வீடுகளில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இவற்றின் மதிப்பு மங்கள்யான் விண் பயண திட்ட செலவைக் காட்டிலும் 125 மடங்கு அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தொகையைக் கொண்டு இந்திய உணவுக் கார்ப்பரேஷனின் அனைத்து நிலுவைத் தொகை களையும் செலுத்தி விட முடியும். மத்திய பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ஒதுக்கப்படும் தொகையை விட இது ஒன்றரை மடங்கு அதிகமாகும் எனவும் தெரியவந்துள்ளது.

மக்களின் செலவழிக்கும் திறன் அதிகரித்துள்ளது. அதே போல வாங்கும் சக்தியும் அதிகரித்துள்ளது. இதனால் வீணாவதும் அதிகமாக உள்ளது. பயன்படுத்தப்படாமல் வீணாகும் பொருள்களை உபயோகமுள்ள பொருள்களாக மாற்றுவதற்கான வழிமுறைகளை ஓஎல்எக்ஸ் மேற்கொண்டு செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x