Published : 03 Apr 2015 10:49 AM
Last Updated : 03 Apr 2015 10:49 AM

தமிழகத்தில் ரேஞ்ச் ரோவர் எவோக்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார் நிறுவனம் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கிய தனது ஆலையின் செயல்பாடுகளை தற்போது வேகப்படுத்தியுள்ளது. புனே ஆலையின் சமீபத்திய படைப்பான ரேஞ்ச் ரோவர் எவோக் மும்பையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது தமிழகத்திலும் விற் பனைக்கு வந்துள்ளது.

பொதுவாக வெளிநாட்டுக் சொகுசு கார்களை வாங்க வேண்டுமென்றால் அதற்காக பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். அந்த கார்களை வெளிநாடுகளிலிருந்து இந்தியா வுக்குக் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். இது மாதிரியான கார்களை சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழில திபர்கள் என பொருளாதாரத்தின் மேல்தட்டு மனிதர்கள் எளிதில் வாங்கினாலும், ஓரளவு வசதி படைத்தவர்களுக்கு இந்த கார்களை வாங்குவது சாத்திய மில்லாமலேயே இருந் தது.

ஏனென்றால், இதை வெளிநாட் டிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதற்கு நிறைய சுங்க வரி கட்ட வேண்டியிருக்கும். வெளிநாட்டுக் கார்களை வாங்கித் தருவதற்கென்று நிறைய முகவர்கள் உருவானார்கள். வெளிநாட்டுக் காரை விரும்புவோர் பெரும்பாலும் இத்தகைய முகவர்களை நம்பியிருக்க வேண்டியிருந்தது. அதிலும் பல சமயங்களில் பிரச்சினை உருவாகவே, இப்போது உள்நாட்டு காரே போதும் என்று இருப்போரும் உண்டு.

பிரம்மாண்டம், சொகுசு, கம்பீரம் என மூன்றையும் ஒருங்கே கொண்டது ஜாகுவார். இந்த காரின் பயணம் சொகுசாக இருப்பது மட்டுமல்ல, வைத்திருப்பவருக்கு அந்தஸ்தையும், கம்பீரத்தையும் அளிக்கும் என்பதில் சந்தேக மில்லை. இதனாலேயே இந்தக் கார்களுக்கென்று தனி ரசிகர் வட்டாரம் உண்டு. இந்தியாவில் தங்களது தயாரிப்புகளுக்கு உள்ள வரவேற்பைக் கருத்தில் கொண்டு இந்நிறுவனம் 2011-ம் ஆண்டில் புனேயில் அசெம்பிளி பிளான்ட் ஒன்றைத் தொடங்கியது.

இந்த உருவாக்க மையம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஜாகுவார் கார்களுக்கான வாடிக்கை யாளர்கள் வட்டமும் நாடு முழுக்க பெரியளவில் விரிவடைந் துள்ளது. புனே உருவாக்க மையம் தனது ரேஞ்ச் ரோவர் எவோக்கை 4-வது வாகனமாக சமீபத்தில் உருவாக்கி யுள்ளது. இந்த கார் அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் மும்பையில் நடந்தது. இதில் ஏராளமான சினிமா நட்சத்திரங்களும், தொழிலதிபர்களும் கலந்து கொண்டதிலிருந்தே ஜாகுவார் கார்களின் மதிப்பை உணரலாம்.

அறிமுக விழாவில் பேசிய ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியாவின் தலைவர் ரோஹித் சூரி, ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் என இரண்டு மாடல்களுக்குமே இந்திய ஆட்டொமொபைல் சந்தையில் குறிப்பிடத்தக்க வரவேற்பு உள்ளது என்பதை நம்புகிறோம். இந்தியாவுக்குள்ளேயே இந்த கார்களின் உருவாக்கப் பணி களை மேலும் விரிவாக்கம் செய்யவுள்ளோம். நாங்கள் மற்ற நிறுவனங்களின் சொகுசு கார்களுக்கு இணையாகவே எங்கள் நிறுவன கார்களின் விலையும் நிர்ணயித்துள்ளோம் மும்பை விற்பனையக விலை ரூ 48.73 லட்சமாகும். இது இந்தியா வில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுத்தரும்” என்றார்.

தமிழகத்தில் ஜாகுவார் கார்களின் விற்பனை மற்றும் பொதுமக்களின் ஈடுபாடு, தொடர்பாக ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களின் தமிழக விற்பனை மையமான வி.எஸ்.டி கிராண்டியரின் விற்பனை பிரிவு தலைவர் ஜே.மகேந்திர வர்மன் மற்றும் சந்தை ஒருங்கிணைப் பாளர் மித்தேஷ் ஜெயின் ஆகியோர் கூறியதாவது:

ஜாகுவார் கார்களுக்கான எங்களது விற்பனையகம் கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. எங்களது விற்பனை யகம் ஓராண்டுக்கும் மேலாக கோவையிலும் இயங்கி வருகிறது. இரண்டு ஊர்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்தாண்டில் சுமார் 145 கார்களை விற்பனை செய்துள்ளோம்.

இந்த ஆண்டு 18 முதல் 20 சதவீதம் வரை எங்களது விற்பனை உயர்ந்துள்ளது. புனே உருவாக்க மையத்தால்தான் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் வெளிநாடுகளிலிருந்து கார்களை இறக்குமதி செய்வதற்கு ஆகும் செலவைவிட புனே உருவாக்க மையத்தில் தயாரிக்கப்பட்ட காருக்கான விலை சுமார் ரூ.10 முதல் 15 லட்சம் வரை குறைவாகவே உள்ளது.

புனே ஆலை தொடங்கியது முதல் ஒருவர் கார்களுக்கு முன்பதிவு செய்தால் 2 முதல் 3 வாரத்தில் கார்கள் வீடு தேடி வரும். இதுவே இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்தால், முன்பதிவு செய்த நாள் முதல் 3 முதல் 4 மாதங்கள் பிடிக்கும். ரேஞ்ச் ரோவர் எவோக் மாடல் காரை சென்னையிலும் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் விற்பனையக விலை ரூ.50 லட்சமாகும்.

தென்னிந்திய திரைத் துறையினர், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என்று எங்களது வாடிக்கையாளர்கள் வட்டம் வலுவாகவே உள்ளது. சென்னை விற்பனை மையத்துக்கு சுமார் 60 சதவீதம் வாடிக்கையாளர்கள் சென்னையை சுற்றியே உள்ளனர். இதுதவிர சென்னை விற்பனை மையத்துக்கு தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் சுமார் 40 சதவீதம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

ஜாகுவார் என்றாலே பொருளா தார அளவில் மிகவும் சொகுசாக வாழ்பவர்களுக்கான கார் என்ற நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக சென்றாண்டு நிறைய திட்டங்களை அறிமுகப் படுத்தினோம்.

அதனடிப்படையில் ரூ 5 லட்சம் முன்பணம் செலுத்தி மாதம் ரூ.45 ஆயிரம் தவணையில் செலுத் துகிற முறையை செயல்படுத்தி வந்தோம். இந்த சலுகை தற்போது முடிவடைந்துள்ளது. இந்த விற்பனை ஆண்டில் வேறு சலுகைகளை கொண்டு வரவுள்ளோம் என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x