Published : 15 May 2015 10:20 AM
Last Updated : 15 May 2015 10:20 AM

ஜெர்மனி கார்கள் மீது ஆசை அதிகம்: இயக்குநர் கே.வி.ஆனந்த்

கார்களில் ஜெர்மன் தயாரிப்புகள் என்னை மிகவும் கவர்ந்தவை. ஜப்பானிய கார்களோடு போட்டிப் போட்டுக்கொண்டு ஜெர்மன் நாட்டினர் இறக்கும் புதிய வடிவங்களும், அதன் தரமும் வியக்க வைக்கிறது. என்னிடம் இப்போது ‘ ஆடி ஏ6’ பிளாக் நிற கார் உள்ளது.

பொதுவாக ஜெர்மன் தயாரிப்பில் சிறந்த மூன்று கார்களை இங்கே பட்டியலிட்டே ஆக வேண்டும். ‘பென்ஸ்’, இரண்டாவது ‘பிஎம்டபிள்யூ’, மற்றொன்று ‘ ஆடி’. இதில் சௌகரியமாக (கம்போர்ட்) ஒரு படகில் அமர்ந்து பயணிக்கும் உணர்வை ஏற்படுத்துவது, ‘பென்ஸ்’.

அதுவே, டிரைவிங் இருக்கையில் அமர்ந்து காரை நகர்த்தும்போது இனம்புரியாத உணர்வை ஏற்படுத்துவது ‘பிஎம்டபிள்யூ’. பிரேக், டேர்னிங் செய்யும்போது கிடைக்கும் ஸ்மூத் இதெல்லாம் அப்படி ஒரு டெக்னிக்கல் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டிருப்பது, ‘பிஎம்டபிள்யூ’.

இது இரண்டும் கலந்ததுதான் ‘ஆடி’. டிரைவிங் இருக்கையில் அமர்ந்து செல்வதற்கும், ரிலாக்ஸாக இருக்கையில் அமர்ந்துகொண்டு பயணிப்பதற்கும் ஏற்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ள கார், ஆடி.

இப்படி சொன்னாலும், கார்களில் பயணிப்பதைப் போலவே, கட்டை வண்டியில் அமர்ந்து பயணிப்பதற்கும் தயார் மனநிலையில் இருப்பவன், நான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x