Published : 07 Nov 2014 09:46 AM
Last Updated : 07 Nov 2014 09:46 AM

சூழலுக்கு பாதிப்பில்லாத கார்கள் சாத்தியமா?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் வாராவாரம் பெட் ரோல், டீசல் விலை குறைந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். ஆனால் இதே நிலை நீடிக்குமா? அடுத்து எப்போது பெட்ரோல், டீசல் விலை உயரும் என்ற அச்சம் இருந்து கொண்டுதான் இருக்கும். இது ஒரு புறம் இருந்தாலும். சூழலுக்கு பாதிப் பில்லாத வாகனங்களை தயாரிக்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தானிருக்கின்றன.

கச்சா எண்ணெய் வளம் குறையும் போது வாகனப் போக்குவரத்து முடங்கி விடக் கூடாது என்ற தொலைநோக்கு சிந்தனையும் இதற்கு முக்கியக் காரணமாகும். பேட்டரியால் இயங்கும் கார்களை உருவாக்குவதில் பல முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன. இந்த முயற்சியில் சில நிறுவனங்கள் வெற்றியும் கண்டுள்ளன.

இந்தியாவில் ரேவா நிறுவன பேட்டரி கார்கள் ஓரளவு பிரபலம். ஆனால் இந்த கார்கள் பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களோடு ஒப்பிடுகையில் வேகம் குறைவாகத்தான் செல்லும்.

சிக்னலில் வாகனங்கள் சீறிச் செல்லும்போது பேட்டரியில் இயங்கும் ரேவா கார் நத்தை போல மெதுவாக ஊர்ந்து செல்வது அந்த காரை வைத்திருப்பவருக்கே தர்ம சங்கடமாயிருந்தது. இதனாலேயே இந்த கார் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் இந்த நிறுவனத்தை மஹிந்திரா நிறுவனம் வாங்கியதோடு, பேட்டரி கார்களை வடிவமைக்கும் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.

பேட்டரி கார்களின் செயல்பாடு

சூழலுக்கு பாதிப்பில்லாத கார்கள் எனப்படும் பேட்டரியால் இயங்கும் கார்களில் பேட்டரியில் மின்சாரம் சேகரிக்கப்பட்டு காரை இயக்க உதவுகிறது. மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் மூலம் கார் ஓடும். இந்த கார்கள் மெதுவாக ஓடுவது மட்டுமல்ல, ஒரு முறை சார்ஜ் செய்தால் குறைந்த தூரமே ஓடுவதாக இருந்தது. மேலும் இந்த பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதும் இந்த கார்கள் மீது மக்களுக்கு மவுசு குறைந்தது.

தொடர் ஆராய்ச்சி

கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அடுத்தடுத்து புதிய கார்களை அறிமுகப்படுத்தும் அதே நேரம், சூழலுக்கு பாதிப்பில்லாத பேட்டரி கார் தயாரிப்புக்கான ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

கார் தயாரிப்பில் முன்ன ணியில் உள்ள செவர்லே நிறுவனத்தின் பேட்டரி கார்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானது. இந்த கார்கள் சிறந்த காருக்கான விருதையும் வென்றது. இதை மேம்படுத்தி பெருமளவிலான மக்கள் பயன்படுத்தும் வகையில் உரிய மாற்றங்களை செய்து வருகிறது செவர்லே.

சொகுசு கார்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஆடி நிறுவனம் பேட்டரி கார் ஆராய்ச் சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. அமெரிக்காவின் போர்டு மற்றும் ஜப்பானின் நிசான் நிறுவனங்கள் பேட்டரியால் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஃபோர்டு நிறுவனத்தின் ஃபோகஸ் எலெக்ட்ரிக் கார்கள் இப்போது அமெரிக்க சாலைகளில் வலம் வரத் தொடங்கியுள்ளன.

லித்தியம் பேட்டரியால் இயங்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 90 கி.மீ. தூரம் வரை ஓடக் கூடியது. மணிக்கு 85 கி.மீ வேகத்தில் செல்கிறது. இந்தக் காருடன் மொபைல் அப்ளிகேஷனையும் இந்நிறுவனம் தருகிறது. இதில் காரின் பேட்டரி எவ்வளவு தூரம் ஓட உதவும், அடுத்த பேட்டரி சார்ஜிங் மையம் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்ற விவரத்தை அறிய முடியும். இந்த காரில் நேவிகேஷன் சிஸ்டம் கொண்ட வரைபடம் உள்ளதால், உங்கள் பயணத்தை திட்டமிட முடியும்.

சூரிய ஆற்றலில் பேட்டரியை சார்ஜ் செய்து அதன் மூலம் காரை இயங்கச் செய்வதற்கான ஆராய்ச்சியில் ஜப்பானின் டொயோடா நிறுவனம் ஈடுபட் டுள்ளது. கார் ஓடும்போது அதற் கான சக்தி பேட்டரி மூலம் பெறப்படுவதால் பேட்டரி சூடாகும். இதைக் குறைக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் பார்து பல்கலை மாணவர்கள் ஈடுட்டுள்ளனர். மாசாசூசெஸ்ட் மாணவர்கள் விரைவாக சார்ஜ் செய்யும் வாகன வடிவமைப்பில் வெற்றியும் கண்டுள்ளனர்.

கரியமிலவாயு வெளியேற் றம்தான் நமது புவிக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. இதனால் இதைக் குறைப்பதற்காக சூழலுக்கு பாதிப்பில்லாத வாகனங்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் முன்னேறிய நாடுகள் தீவிரம் காட்டுகின்றன.

இத்தகைய வாகனங்களுக்கு மத்திய அரசு அதிக அளவில் வரிச் சலுகை அளித்து ஊக்கமளிப்பதன் மூலம் நமது நாட்டிலும் பேட்டரி கார்கள் புழக்கம் அதிகரிக்கும். வெறுமனே பூங்காக்களிலும், கோல்ஃப் மைதானங்களிலும் பயன்படுத்தப்படும் பேட்டரி கார்களின் புழக்கம் அதிகரிப்பதற்கு ஆராய்ச்சிகள் மட்டும் உதவியாக இருக்காது. இதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசும் எடுத்தால்தான் சூழல் பாதிப்பில்லாத வாகனங்களின் பெருக்கம் சாத் தியமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x