Published : 24 Oct 2015 09:34 AM
Last Updated : 24 Oct 2015 09:34 AM

இவரைத் தெரியுமா?- விஷால் சேகல்

லாவா மொபைல் நிறுவனத் தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர். 2009ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

சண்டீகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் பிடெக் பட்டமும், புதுடெல்லி பல்கலைக்கழகத்தின் எப்எம்எஸ் கல்வி நிறுவனத் தில் மேலாண்மையியலில் பட்டமும் பெற்றுள்ளார்.

1992ல் மாரிகோ நிறுவனத் தில் நிர்வாகவியல் பயிற்சி பெறுநராக வேலைக்குச் சேர்ந்தவர்.

ஸிப் டெலிகாம், கோகோ கோலா, பெப்சிகோ நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

ஏர்டெல் நிறுவனத்தின் ராஜஸ்தான் மாநில தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பு வகித்தவர். ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனத்தில் போஸ்ட்பெய்ட் பிஸினசின் விற்பனை மற்றும் செயல்பாடுகள் கிளஸ்டர் ஹெட் ஆக பணியாற்றியுள்ளார்.

தொலைத்தொடர்பு மற்றும் எப்எம்சிஜி துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாக அனுபவம் கொண்டவர்.

தொலைதொடர்பு துறை மற்றும் நுகர்பொருள் துறையில் வாடிக்கையாளரிடம் முதலில் சென்று சேரவேண்டும் என்றால் நிறுவனம் தொழில்நுட்ப பரிணாமத்துக்கு முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x